பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61


முறிய வாது செயத் திருவுள்ளமே.
தென்றவாது செயத் திருவுள்ளமே.

எனப் பாடி வெற்றியே வேண்டுகின்றார் சம்பந்தர். அழித்தல், முறியடித்தல், செண்டடித்துளறல், ஓட்டல், கரக்கவைத்தல், வெல்லுதல் முதலிய சொற்கள் போரில் வழங்குவனவே ஆம். இங்கு “வாது செய்ய” என்பதால் எதிருரையாடல் குறிக்கப்படுகின்றதே அன்றிப் போரொன்றும் குறிக்கப்பட இல்லை. ஆதலின், முறியடித்தல் முதலான சொற்கள் உவமையாக வந்தவையே அன்றி போரைக் குறிக்க வந்தவை அல்ல. எதிருரையாடலில் முறியடித்தலையும், செண்டடித்தலையும் எங்குக் கண்டுள்ளோம்? ஆதலின் அழிதலாவது மனம் அழிதலே ஆம். அழிந்த குடி என்பது நிலைகெட்ட குடி என்று பொருள்படுதல் போல அழித்தல் என்பது நிலைகெடச் செய்தலையே குறிக்கும்.

இவ்வாறு வெற்றி வேண்டி எதிருரையாடுகையில், தாம் எடுத்துரைக்கும் அறிவுரைகள், அவர்களுடைய உள்ளத்தே புகவேண்டுமானால், வாழைப் பழத்தே ஊசி நுழைப்பது போல மெல்ல மெல்ல அவர் உளங்கொள எடுத்தோத வேண்டும்.

‘பையவே வாது செய்யத் திருவுள்ளமோ’

என வேண்டுகின்றார். ஏன்? அவர்கள் மனத்தை விளக்கி அவர்களையும் தம்முடன் கொண்டு செல்ல வேண்டாவாழ அவர்களது அறிவை