பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


விளக்கி எதிருரை ஆடலையே இப்பெரியார் விரும்பி நிற்கின்றார்.

‘தேற்றிவாது செயத் திருவுள்ளமே’

என விடை கேட்கின்றார். இவ்வாறு அறிவை விளக்கி எதிருரை ஆடுகையிலும், சிலபோது, சில பெரியோர், எதிரிகளை வெல்வதொன்றையே பொருளாக‍க் கொண்டு உண்மை விளக்கத்தைப் புறக்கணிப்பர். நெஞ்சாரப் பொய்யென அறிந்தவற்றையும் எதிரியின் ஏழ்மையறிவை அறிந்து தம்மறிவுச் செருக்கால் உண்மை என நிலை நாட்டப்புகுவர். ஆனால், அஃது இறைவன் வழிநின்ற ஒழுக்காமாகாது. சம்பந்தர் இறைவன் வழி நின்ற ஒழுக்க நெறி சென்றே வெல்ல விரும்புகின்றார்:

அமணர் திறத்து நின் சீலம் வாது செயத் திருவுள்ளமே.

என வேண்டுகின்றார். சமணர்களை நல்நெறியில் திருப்புவதே சம்பந்தர் நோக்கம். அழித்தல் என்பதன் உண்மைப் பொருளை இப்பெரியாரே குறிக்கின்றார்.

‘தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே.’

எனப்பாடி விடை கேட்கின்றார். சமணர்களுடைய கற்பாவது யாது? அவர்களுடைய கொள்கைப்படி துறவினை வழிபடுவதன்றோ அவர்களுக்குக் கற்பாவது. அக்கொள்கையை மறந்து சிவனை வழிபடத் தொடங்கினால் அவர்கள் கற்பழிவர் அன்றோ? ஈதே இப்பெரியார் வேண்டியது என்பதாயிற்று. இவர்களைக் கொன்-