பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


றழிக்க இவர் வேண்டுகின்றார் இல்லை. இவ்வாறு செய்தனர் ஆயின், தாம் வேண்டியபடி அருள் பெறவில்லை என்று முடியும். அப்பழி அவருக்கேன்? சமணர்களது வாழ்க்கையில் காணக்கிடக்கும் குற்றங்களைக் களையவே இப்பெரியார் இறைவனை வேண்டுகின்றார்.

“அமண் ஆசற”

என்று பாடுதல் காண்க. பாடி விடை கொண்டு அங்ஙனமே எதிருரையாடி வெற்றி பெறுகின்றார்.


5. கழுவேற்றிய கதை


இவ்வாறு பிறருடைய சினத்தைத் தணிவித்துச் சிவனது திருவருள் வழியே நின்ற இப்பெரியார், சமணர்களைக் கழுவேற்றினர் என்று சிவனை வழிபடுவோர் சிலர் களிப்புறுகின்றார்கள். சம்பந்தர் பாடிய பாடல்கள் அருள் வழியில் நிற்க, அவர் செயல் மருள் வழியில் நிற்குமோ? அவர் சொல்வது ஒன்று; செய்வது வேறோ என ஐயம் எழுகின்றது. திருஞான சம்பந்தரது பாடல்கள் என இப்பொழுது அகப்பட்டுள்ளனவற்றை நாம் ஆராய்ந்த வரையில், கழுவேற்றிய குறிப்பு ஒன்றேனுமில்லை. உள்ள குறிப்புக்களனைத்தும், நாம் எடுத்துக் காட்டியபடி, அக்கதையை மறுத்து உரையாடுகின்றன.

‘தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே’

என்று வேண்டுகின்றாரே அன்றி,