பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64


“கழுவேற்றத் திருவுள்ளமே”

என்று வேண்டவில்லை. ஆனால், ஞான சூரியன் என்ற நூல் ஒன்று,

அந்தணாளர்
புரியுமருமறை சிந்தை செய்யா அருகர்
சிரங்களைச் சிந்தவாது செயத் திருவுள்ளமே.

என்று சம்பந்தர் பாடுகின்றதாக எழுதுகின்றது. யாம் கண்ட திருமுறைப் பதிப்புகளில் எல்லாம்,

அந்தணாளர்
புரியுமரு மறை சிந்தை செய்யா அருகர்
திறங்களைச் சிந்தவாது செயத் திருவுள்ளமே.

என்றே இப்பாடல் காணப்படுகின்றது. “சிரங்களைச் சிந்த” என்பது அச்சுக் கோத்தவனின் கைத்தவறே. ‘திறங்களைச் சிந்த’ என்பதே பாடல் என்று ஞான சூரியனை எழுதியவரே ஒப்புக் கொண்டதாகத் திருவாளர் திரு. வி. கலியாண சுந்தர முதலியார் தெரிவித்துள்ளார். “சிரங்கள் சிந்த‍”த் திருவருளை வேண்டி நின்ற கதை எந்த நாளிலும் திருமுறையி் வழங்கியதில்லை என்பதாயிற்று. திரிவுகளை என்றும் ஆம்.

சம்பந்தர் காலத்திருந்த திருநாவுக்கரசரும், இக்கதையைப் பற்றிக் கூறுகின்றார் இல்லை. அப்பர் காலத்திருந்த அரசன் ‘குணபரனே’ என்று பெரிய புராணத்தினின்றும் அறிகின்றோம். கல் ஏட்டினின்றும், குணபரன் என்பது மஹேந்திர வர்ம பல்லவனே என்பது தெளிவாகின்றது. கருங்கற் கோயில்கள் அவன் நாளிலிருந்தே