பக்கம்:சரணம் சரணம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 சரணம் சரணம்

|பிருதிவியும் அப்புவும் தேயுவும் வேகமாக வீசுகின்ற வாயுவும் எங்கும் பரந்திருக்கும் ஆகாசமும் தம்மிடத்தில் பரவி இருக்கும் மணம், சுவை, ஒளி, பரிசம், ஒலி என்னும் ஐந்து தன்மாத்திரைகளோடு ஒன்று படு ம் படி யாக அவற்றேடு சேர்ந்திருக்கும் பரமேசுவரி.

வெங்கால்-வேகமாகிய காற்று; இங்கே வெம்மை வேகத்தைக் குறித்தது; சண்டமாருதம் என்பது போல. படர் விசும்பு-எங்கும் பரவியிருக்கிற ஆகாசம், ஆகாசம் என்னும் பூதம் எல்லாப் பூதங்களேயும் தனக்குள் அடக்கிக் கொண்டு வியாபகமாய் இருப்பதல்ை படர் விசும்பு’ என்றார், ஊரும்-பரந்திருக்கிற முருகு-மனம் சிறுபரிசம். ஒன்றுபட-பூதங்களில் இந்தத் தன் மாத்திரைகள் இனேயும்படி. தலவி-எல்லாவற்றிற்கும் மூலகாரண மான முதல்வி.)

இப்படிப் பூதங்களுக்குரிய தன்மாத்திரைகளைச் வைத்து அங்கங்கே பொருந்தியிருக்கும் நிலை மிகவும் நுட்பமானது அதை யாவரும் அறிந்து கொள்ள இயலாது.

உயிர்க் கூட்டங்கள் சர்வ சூட்சுமமாக உள்ள தன்னே அறிந்து கொள்ள வேண்டுமென்ற கருணேயால் அம்பிகை அழகான வடிவங்களே எடுத்துக்கொண்டு அடியார்களுக் குக் காட்சி தருகிருள். தலந்தோறும் வெவ்வேறு வடிவ மும் திருநாமமும் கொண்டு எழுந்தருளியிருக்கிருள். எல் லாத் தலங்களிலும் சிறந்ததாகிய தில்லேயில் சிவகாம சுந்தரி என்ற திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கிருள். ‘தில்லே யூரர்தம் பாகத்து உமை’ என்று காப்புச் செய்யு ளில் அந்த அம்பிகையைச் சுட்டினர் ஆசிரியர். இப்போது அந்தச் சிவகாமசுந்தரியைக் குறிக்கிரு.ர்.

பூதங்களோடு தன்மாத்திரைகள் இனேயும்படி செய்யும் மூல சக்தியாகிய அன்னே யாவரும் தரிசித்து உய்யும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/154&oldid=680531" இலிருந்து மீள்விக்கப்பட்டது