பக்கம்:சரணம் சரணம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் தரும் 151

என்கிறார். இந்த உலக வாழ்வுக்கு இன்றியமையாத செல் வத்தை எம்பெருமாட்டியின் கடைக்கண் பார்வையினுல் பெறலாம். முனிவர்களுக்கும் இந்த உலகத்தில் செய்ய வேண்டிய கடமைகளுக்கும் செல்வம் இன்றியமையாத தாக இருக்கிறது. ‘முனிவரும் மன்னரும் முன்னுவ பொன் ல்ை முடியும்’ என்று திருக்கோவையாரில் மானிக்க வாசகர் பாடுகிறார். ஆதலால் இவ்வுலக வாழ்வுக்கு அடி நிலபோல இருப்பது செல்வம். அதை அபிராமி அன்னே கயின் அன்பர்கள் முதலில் பெறுவார்கள்.

செல்வம் மாத்திரம் இருந்தால் போதாது. அதனே நல்ல வழியில் பயன்படுத்த வேண்டுமானல் அறிவு வேண் டும். ஆகவே அபிராமியின் கடைக்கண்கள் செல்வம் தருவதோடுகூடக் கல்வியையும் தரும். வறுமை உடைய வனுக்குக் கல்வியில் ஊற்றம் இராது.

‘கல்வியை, நிச்ச நிரப்புக்கொன் ருங்கு??

என்று வள்ளுவர் சொல்வார். ஆதலால் முதலில் செல் வத்தைத் தந்து, வறுமையில்ை துன்பம் இல்லாத யைப் பெற்றவர் பின்பு கல்வியிேைல சிறக்கும் திறத்தை அடைவதற்கும் வழி வகுக்கும், அன்னேயின் கடைக் கண்கள்.

கல்வி தரும்.

செல்வத்தைப் பெற்று, கல்வியையும் பெற்றவர்கள் மனத்தில் நிறைவு பெறுவார்கள். செல்வம் இல்லாவிட் டால் அது வேண்டும், இது வேண்டும் என்ற ஆசை உண் டாகும். கல்வி இல்லாவிட்டாலோ எந்தத் துன்பம் வந் தாலும் தளர்ச்சி உண்டாகும். செல்வமும், கல்வியும் ஒருங்கே பெற்றவர்கள் தளர்வு இல்லாதவர்களாவார்கள். அம்பிகையே சிறிதும் தளர்வு இல்லாத மனப்பாங்கைத் தந்து அருள்வாள். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/161&oldid=680539" இலிருந்து மீள்விக்கப்பட்டது