பக்கம்:சரணம் சரணம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#52 சரணம் சரணம்

ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும்

மனிதனுக்கு இன்பம் வருவது பல பொருள்களாலே என்று இருந்தாலும் அந்த இன்ப உணர்வை அநுபவிப்பது: மனம். மனம் செயல்படவில்லே யென்றால் இன் பத்திற்குரிய பொருள்கள் எத்தனே இருந்தாலும் பயன் உண்டாகாது. தளர்கின்ற மனம் உடையவனுக்குச் சுற்றத்தார் இருந்: தாலும் செல்வம் இருந்தாலும் கல்வி இருந்தாலும் எல் லாம் சமயத்தில் பயன்படாமல் ஒழியும். திண்ணிய நெஞ் சம் உடையவர்கள் எதற்கும் அஞ்சாமல் உலக வாழ்க்கை யில் இன்பத்தை அடைவார்கள். வருகிற துன்பத்திற்கு அஞ்சி மனம் தளர்ந்தவர்களுக்கு வாழ்க்கைக்குரிய வசதி: கள் இருந்தாலும் இன்பம் உண்டாகாது. இடும்பை வந்: தால் துன்புறுவார்கள். திண்ணிய நெஞ்சம் உடைய வனுக்கு மேலும் மேலும் இடும்பை வரும்போது அந்த இடும்பையே இடும்பைப்படும் அல்லாமல் அவன் இடும். 500 i Li i ji- LD IT L-L-T OT.

இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு. இடும்பைப் படாஅதவர்’ என்பது திருக்குறள். அன்னேயின் திருவருளால் மனத் திண்மை உண்டாகிவிட்டால் உலகத்தில் என்றும் மாருத இன்ப வாழ்வு கிடைக்கும். நினேத்தவற்றை அடைகின்ற. உயர்ந்த நிலே வரும்.

‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்

என்று வள்ளுவர் கூறுவர். திண்ணியராகப் பெறுவதற்கு வழி அன்னேயின் அன்பு. ஆதலால் அன்னேயின் கடைக் கண் பார்வை அவளுடைய அன்பர்களிடத்திலே ஒரு நாளும் தளர்வறியாத திண்ணிய மனத்தைத் தரும்.

அன்னேயின் திருவருளில் ஈடுபட்டவர்களுக்கு வடிவழகு, அடிடச் சித்திக்கும் என்று சொல்கிறார் அபிராமிபட்டர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/162&oldid=680540" இலிருந்து மீள்விக்கப்பட்டது