பக்கம்:சரணம் சரணம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டு கொண்ட அழகு  ;

மொதங்க கன்யாம் மனஸ்ா ஸ்மராமி’’

என்பது சியாமளா தண்டகம். மதங்கர் குலப் பெண்களில் ஒருத்தியாகத் தோன்றிய பேரழகி எம்பெருமாட்டி.

மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி

மதங்கர்குலப் - பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன்

பேரழகே -

கண்டு கொண்டேன் என்று பாடுகிறார் இந்தப் பக்தர்.

அம்பிகையின் திருவுருவத்தை நாமும் காண்கிருேம். சிறந்த பக்தர்களும் தரிசிக்கிறார்கள். இரண்டு பேர் தரி சிப்பதற்கும் வேறுபாடு உண்டு. மிட்டாய்க் கடைக்குப் போகிற ஏழையைப் போல அம்பிகையையும் அவள் அலங் காரத்தையும் தரிசித்துவிட்டு, ஆகா! என்ன அழகு!’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிருேம் நாம்.

அம்பிகையைத் தரிசித்தால் மட்டும் போதாது. உட் கொள்ள வேண்டும்; தியானிக்க வேண்டும். மிட்டாயைக் கண்டவனுக்கு அதன் சுவை தெரியாது. அதை உண்ட வனுக்குத்தான் அதன் சுவை தெரியும். அதுபோலச் சகுண மூர்த்தியாக உள்ள அம்பிகையைத் தரிசிப்பதல்ை ஒரளவு கிளுகிளுப்பு உண்டாகும், மிட்டாயைக் கண்டவனுக்கு நாவில் நீர் ஊறுவது போல, நல்ல பயனேப் பெறவேண்டு மால்ை அவளே உள்ளே நிறுத்தித் தியானிக்க வேண்டும். கோவில், குளம், மூர்த்தி, உற்சவம் எல்லாம் இதற்காகத் தான் ஏற்பட்டிருக்கின்றன.

கண்டதோடு நிற்கக்கூடாது; கண்டு, கொள்ள வேண் டும். கண்டால் கண் களிக்கிறது. பிறகு உட்கொண்டால் உயிரே களிக்கும். அபிராமி பட்டர் அவ்வாறு கண் களிக்கும்படி அம்பிகையைத் தரிசித்துப் பின்பு அந்த வடிவத்தை உள்ளே கொண்டு தியானித்து மைேலயம் பெற்று இன்புற்றவர். அதனல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/171&oldid=680550" இலிருந்து மீள்விக்கப்பட்டது