பக்கம்:சரணம் சரணம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சரணம் சரணம்

அவரவர்களுடைய பசி தனி; பசியாறுவதுந் தனிதான்; அநுபவமும் அத்தகையதே.

தியானமும் ஒவ்வொருவரும் தனியே இருந்து தம் கவனத்தை உள்முகமாகத் திருப்பிச் செய்யவேண்டியது. எத்தனேக்கெத்தனே தனிம்ை இருக்கிறதோ, அத்தனேக்

கத்தனே தியானம் எளிதில் கை கூடும். -

‘கனியேனும் வறியசெங் காயேனும் உதிர்சருகு கந்தமூ லங்களேனும் கனல்வாதை வந்தெய்தின் அள்ளிப்

புசித்துநான் கண்மூடி மெளனியாகித் தனியே இருப்பதற் கெண்ணினேன்?? என்று தாயுமானவர் பாடுவார்.

இந்தத் தியான முறையை அபிராமி பட்டர் சொல் கிறார். உன்னுடைய இடையையும் மார்பையும் குழலையும் முக்கண்ணையும் உள்ளத்தே தியானித்துத் தனியே அமர்ந்து இன்புறுபவர்கள் செய்யும் செயலே பெரிய தவம்; அதற்கு ஒப்பான தவம் வேறு இல்லே, என்கிறார்,

கருத்தில் வைத்துத் - தன்னந் தனி இருப்பார்க்கு இது

போலும் தவம் இல்லேயே! தனியாக இருப்பது என்றால் பல மக்கள் கூடும் இடத் தில் ஒதுங்கித் தனியே இருத்தல் என்று ஆகும். யாருடைய கண்ணிலும் படாமல் யாரையும் கண்ணுல் பார்க்காமல் தனியான இடத்தில் இருந்து தியானம் செய்வார் என்பதை, ‘தன்னந்தனி இருப்பார்?’ என்றார். - அன்னேயின் வடிவத்தை உள்ளத்தில் வைத்துத் தியானம் புரிபவர்கள் மெல்ல மெல்லக் கருவி கரணங்கள் கழல, மனமற்ற நிலையில் இன்புறுவார்கள். தியானம் நன்கு நிறைவேறினல் சமாதி நிலே கைகூடும். தவத்தி ஆணுடைய பயனே அதுதான். ஆகவே இந்தத் தியானமே வெரிய தவAாகும். இதை வற்புறுத்துகிறார் ஆசிரியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/28&oldid=680604" இலிருந்து மீள்விக்கப்பட்டது