பக்கம்:சரணம் சரணம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய தவம் 19

சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும் பென்னம் பெரிய முலேயும்.முத்

தாரமும் பிச்சிமொய்த்த கன்னங்கரிய குழலும்கண்

மூன்றும் கருத்தில்வைத்துத் தன்னந் தனிஇருப் பார்க்கிது போலும் தவம்இல்லையே. (தேவியானவள் மிகச் சிறிய தன் திரு இடையிலே சாத்திய சிவந்த பட்டாடையையும், மிகப் பெரிய நகிலே அபும், அங்கே அணிந்த முத்துமாலேயையும், பிச்சி மலர் நெருங்கிய மிகக் கரிய கூந்தலேயும், மூன்று கண்களேயும் தம் உள்ளத்திலே தியானித்துத் தனித்திருந்து யோகம் செய்வாருக்கு இவ்வாறு தியானிக்கும் செயலே யன்றி வேறு பயனுடைய தவம் ஒன்றும் இல்லே.

மருங்கு-இடை. ஆரம்-மாலை. சின்னஞ் சிறிய என்பது மிகச் சிறிய என்ற பொருளுடைய வழக்குத் தொடர். பென்னம் பெரிய, கன்னங் கரிய, தன்னந்தனி என்பனவும் அத்தகையனவே. . ‘சின்னஞ் சிறியோர் சிதைவே செயினும் பென்னம் பெரியோர் பிழைசெய் குவரோ கன்னங் கரியோன் மருகா கழியத் தன்னந் தனியேன் றனேயாண் டவனே22 என்ற பழம் பாட்டில் இந்த நான்கு தொடர்களும் வந்துள்ளன.)

அம்பிகையின் திருவுருவத்தை உள்ளத்தே பதித்துக் தியானம் செய்தால், பெரிய தவம் செய்வதனுல் உண்டா கும் பயனே அடையலாம் என்பது கருத்து.

இது அபிராமி அந்தாதியில் 38-ஆவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/29&oldid=680605" இலிருந்து மீள்விக்கப்பட்டது