பக்கம்:சரணம் சரணம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாருக்குப் பயன்? 29

ஒரு மின்னலேயே நம்மால் பார்க்க முடிவதில்லே. மின்னல் அடிக்கும்போது அதைக் கண்டு கண் அவிந்தவர் களும் இருக்கிறார்கள். அப்படியிருக்க ஆயிரம் மின்னுக் கொடிகள் ஒன்றாகத் திரண்டு வந்தால் எப்படி நம்மால் காண முடியும்?

எம்பெருமாட்டி யாவரும் தம் ஊனக்கண்களால் காணும்வண்ணம் இருப்பவள் அல்ல. உண்முகத்தே தியானம் செய்யும் அன்பர்களுடைய அகக்கண்ணுக்குத் தோற்றுகிறவள். அந்தர்முக ஸ்மாராத்யா, பஹிர்முக எமதுர்லபா (870, 871) என்று புகழப் பெறுபவள். அப் பெருமாட்டியைத் தம்முடைய இதயத் தாமரையிலே வைத்துத் தியானிக்கும் பெரியவர்களுக்கு அவள் தன் திருவுருவைக் காட்டியருளுவாள். அன்பர்களின் இதயத் தில் எழுந்தருளியிருப்பதால் அம்பிகைக்கு. ஹ்ருத்யா (308), ஹ்ருதயஸ்த்தா (595) என்ற திருநாமங்கள் அமைந்தன. -

உண்முகத்தே தரிசிப்பவர்களுக்கு ஆயிரம் மின்னல் களேப்போலத் தோற்றில்ை அகக்கண்ணுக்குக் கூசாது. அந்தர்முகத்தில் சோதியைத் தரிசித்து அதில் தம்மைக் கரைத்துக் கொள்பவர்கள் மகா யோகிகள், மின்னுக் கொடி போலத் தோன்றி அதுவே வளர்ந்து, சோதிப்பெரு வெள்ளமாக வளர்ந்து, காண்பான், காட்சி, காணப்படும் பொருள் என்னும் திரிபுடிக்கும் மேற்பட்ட அநுபவத்தை உண்டாக்கும், அத்த ஆனந்தம் எல்லேயில்லாதது. மின்னுக் கொடியாகத் தோன்றிய அன்னே பக்தர்களின் பக்குவம் முதிர முதிர ஆனந்தமயமான கொடியாகிவிடுவாள். இவ்வாறு பக்தர்கள் உள்ளத்துள்யே இணையற்ற இன்பக் கொடியாகப் படரும் பிராட்டி அபிராமி.

அகம் மகிழ் ஆனந்த வல்லி (தன்னத் தியானிக்கும் அன்பர்கள் உள்ளத்தே மகிழ் வதற்குக் காரணமான ஆனந்தக்கொடி.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/39&oldid=680616" இலிருந்து மீள்விக்கப்பட்டது