பக்கம்:சரணம் சரணம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சரணம் சரணம்

opsrglih 160 பாடல்களில் இந்தக் கருத்தைப் பார்த் தோம். பல பாடல்களில் அம்பிகைக்கும் தமக்கும் உள்ள உறவை எண்ணி உரிமை கொண்டாடுவார். தம்முடைய அன்னேயிடம் அந்த உரிமை கொண்டாட அவருக்குத் தகுதியிருக்கிறது. :இவளே யாவும் நமக்குத் தருபவள்: இவளுடைய அருள்தான் நம்மை உய்விக்கும். இவளுக்கும் நமக்கும் உள்ளதொடர்பு அநாதியானது” என்ற உண் மையை உணர்ந்து அன்னேயிடம் பக்தி பூண்டவர் அவர். கனவிலும் நனவிலும் வேறு ஒருவரை அடைக்கலம் புகுதாமல் அன்னேயின் சரணுரவிந்தங்களேயே பற்றிக் கொண்டவர். ஆகவே அவர் அன்னேயிடம் உரிமை கொண்டாடலாம். நாம் அப்படிக் கொண்டாட வகை உண்டா? நம்முடைய மனம் எத்தனையோ பேரைத் or யாக நம்புகிறது. ஒவ்வொரு பயன எண்ணி ஒவ்வொரு வரிடம் அடைக்கலம் புக முடிவு செய்கிறது. நம் கண் னுக்கு முன் வாழும் தாயை, நம்மைப் பெற்ற தாயை, ஒரே பற்றக அன்பு செய்து உறவாடும் இயல்பே நம்மி டம் இருப்பதில்லை. ஒன்றும் அறியாத குழந்தையாக இருக்கும்பொழுது அன்னையை விடாமல் பற்றிக்கொண் டிருக்கிருேம். வளர வளர, அறிவு முதிர முதிர, நம் அன்னேயிடமிருந்து விலகிக் கொண்டு போகிருேம்,

கண்ணிலே கண்ட அன்னேக்கும் நமக்கும் உள்ள உறவே இத்தகையது எள்ருல், கண்ணில் காணுத ஸ்ரீ மாதாவாகிய அன்னேயிடம் எங்கே பக்தி உண்டாகப் போகிறது? அவள் ஒருத்தி இருக்கிருள் என்ற எண்ணத் தையே பல சமயங்களில் மறந்து விடுகிருேம். அப்படி இருக்கும்போது அவளிடம் உரிமை கொண்டாடுவது எப்படி முறையாகும்? .

அபிராமிபட்டரோ உரிமை கொண்டாட முழுத் தகுதி உடையவர். எல்லாவற்றையும் அன்னைக்கு அர்ப் uTd செய்தவர். அவள் அருளே தம்மை இயக்குகிறது என்று முழுமையாக நம்பினவர். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/72&oldid=680653" இலிருந்து மீள்விக்கப்பட்டது