பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசத்தையும், குழந்தைக்குப் பால் ஊட்டுவதின் மூலம் ஏற்படும் இன்பக் கிளர்ச்சிகளையும், வீரனுக்கு வலிமை தருவது தாய்ப்பால்தான் என்பதையுமே காட்டுகிறது.

ஜெயகாந்தனின் பச்சையான கொச்சை எழுத்துக்களான பருத்த முலேக்காம்புகள். ஒவ்வொரு முட்டுக்கும் ஒவ் வொரு உணர்ச்சி என்பவைகள் அம்மாதிரி எண்ணத்தைக் காட்டவில்லை. ஒவ்வொரு முட்டுக்கும் என்பது சப்புகிற குழந்தையைக் காட்டுவதற்கு பதில் காம வெறி கொண்ட முரடனேயே காட்டுகிறது. முலே என்ற வார்த்தையோ, ஆண், பெண் என்ருலோ, ஆபாசப்படுத்தி நிர்வாணமாக்கிப் பார்க்கக்கூடாது என்று அவர் கூறுவது சரிதான்.

மக்களிடம் விஷயங்களே விளக்கவேண்டும். உண்மையையும் கூற வேண்டும். அதற்காகப் பண்பாட்டுக்கு விரோதமாகச் சொல்வது மக்களே நல்வழிப்படுத்தாது.

இதயத்தை வஞ்சிக்காமல் எழுதும் தெம்பும் திராணியும் வேண்டும் தான். ஆனல் அந்தத் தெம்பும் திராணியும் மக் களுக்குப் பயன்படும் முறையில் இருக்க வேண்டுமல்லவா?

காளான் எழுத்தாளர்களும் இலக்கியங்களும் நாட்டில் பெருகக்கூடாது என்று அவர் வாதமிடுவது சரியே. ஆனுல் அதைக் காட்டி எழுத்தாளகுக இருக்கும் நான் என்னு: டைய இதயத்தையும் ரசனையையும் கொல்லமுடியாது. அப்படிக் கொன்று விட்டு நான் என்னத்தை எழுதிக் கொட்ட வேண்டியிருக்கிறது என்று தன்னகங்காரத்தின் உச்சி மீது இருந்து எரிந்து விழுகிருர்,

எழுத்தாளன் எதையும் தன் மனம் கூறுவது போல் எழுதிக் குவிக்கலாம். சுருக்கமாகக் கூறினல் எழுத்து

என் கீர்த்தி மிகுந்த மூளையிலிருந்து வெளி வருகிறது எனக்

காகத் தான் எழுத்து’ என்று கூறுவது போல் உள்ளது.

ü வல்லிக் கண்ணன்/95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/101&oldid=561182" இலிருந்து மீள்விக்கப்பட்டது