பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தையான கார்க்கியும் தப்ப முடியாது; உலக இலக்கிய மேதைகள் எவருமே தப்ப முடியாது. ஏன், நமது நாட்டின் பழம்பெரும் இலக்கியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் எவையுமே தப்ப முடியாது’.

இந்த டிசம்பர் இதழ் ஒருவகையில் எனது விஷேச இதழாக அமைந்துவிட்டது! புத்தகச் சுருக்கம் தவிர, புத்தக விமர் சனம், புத்தகங்களைப் பற்றி (துணுக்குகள்), வேடிக்கை உல கம் (சுவையான செய்திகள்), நையாண்டி பாரதியின் "இரண்டு கதைகள்’ ஆகியனவும் இதில் வெளிவந்துள்ளன. இவ்விதழில் குறிப்பிடப்பட வேண்டிய மற்ருெரு விசேஷம்.

அதுவரை முற்போக்கு அம்சங்களைக் கொண்ட கவிதைகளை மட்டுமே எழுதி வந்த சுந்தரராமசாமி இதர ரகமான - சுவாரஸ்யம் நிறைந்த - சிறுகதைகளைப் படைப்பதில் ஆர் விம் காட்டலானர். அத்தன்மையில் அவரது முதல் கதை என்று சொல்லப்பட வேண்டிய கைக்குழந்தை இந்த இத ழில் பிரசுரமாயிற்று.

11. நான்காவது ஆண்டு விலர்

ஆசிரியர் விஜயபாஸ்கரன் முன்கூட்டியே திட்டமிட்டது போல் நடக்கவில்லே. பத்திரிகையில் நஷ்டம்தான் ஏற்பட் டுக் கொண்டிருந்தது.

மூன்றுவது ஆண்டிலேயே அதைப் பற்றி அவர் அவ்வப் போது குறிப்பிடலானர். சரஸ்வதி'க்கு உதவ வேண்டும் என்ற ஆர்வத்தில் சில நண்பர்கள் சந்தாக்கள் சேகரித்து அனுப்பினர்கள். அதுபோல் இலக்கிய அபிமானிகள் பல ரும் உதவி புரிய வேண்டும் என்ற கோரிக்கைகள் அடிக்

கடி பத்திரிகையில் இடம்பெற வேண்டிய அவசியம் ஏற் பட்டது.

町 வல்லிக்கண்ணன் / 105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/111&oldid=561192" இலிருந்து மீள்விக்கப்பட்டது