பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொந்தப் பெயரிலும், மாஜி ஐ. சி. எஸ். காரர்கள் வேலை யிழந்தவர்கள், ஒரு மாஜி கவ்ர்னர் ஜெனரல், மாஜி கவர்னர் கள், மாஜி. இத்யாதிகள் எல்லோரும் கங்கணம் கட்டிக் கொண்டு தழிழ் இலக்கியத்தை உஜ்ஜீவிக்கச் செய்ய முன் வந்திருக்கிறது கண்டு சந்தோஷப்படாதவர் யாரே யாவர்? தமிழ் இலக்கியத்தை இந்த ‘மாஜி'களிடமிருந்தெல்லாம் காப்பாற்ற, ஒழிந்த நேரத்தில் இலக்கியம் செய்ய முன்வரு பவர்களிடமிருந்தெல்லாம் இலக்கியத்தைக் காப்பாற்ற சரஸ் வதியிடம் சரணடைவதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் வழியிருப்பதாகத் தெரியவில்லை. -

சில விசித்திரங்கள் கண்ணில் படுகின்றன. அதைச் சொல் லத் தானே வேண்டும்? Socrates என்கிற கிரேக்கப் பெயர் அசல் தமிழாகி சோக்ரதர் ஆகி விடுகிறது. ஆனல் Cormille என்கிற பிரஞ்சு மொழிப் பெயர் கார்ணெய் என்று பிரெஞ்சுக் கன்னித்தனம் கழியாமல் வருகிறது, இதை விசித்திரமென்று சொல்லாமல் வேறு என்ன சொல்லுவது!

- சாகிற காலத்தில் சங்கரா சங்கரா என்று சொல்லுவது பற்றி ஒரு பழமொழி உண்டு. இப்போது சங்கரன் பெயர் அவ்வள வாக நாகரீகமான தில்லை. கீதையும் கிருஷ்ணனும் பாகவத மும் தான் Fashionable என்று சொல்ல வேண்டும். கோர்ட்டு மூலம் தங்களுடைய நேர்மையையும் நாணயத்தையும் நிலை நிறுத்திப் பெயர் சொல்லி விட்டவர்கள் சங்கரா சங்கரா என்றும், கிருஷ்ணு கிருஷ்ணு என்றும் கூப்பாடு போடுகிருர் கள். கலி வந்த காரியம் முற்றி விட்டது - பழுத்தும் விட்டது என்று தான் சொல்ல வேண்டும், வேறு என்ன? பாகவதத் திற்கும், கிருஷ்ணனுக்கும், கீதைக்கும், வேதாந்தத்துக்கும், சோக்ரதருக்கும், கார்ணெய்க்கும் தான் வேறு என்ன இலக் கிய சாயுஜ்ஜியம் வேண்டும்? யாராவது சொல்லுங்களேன், பார்க்கலாம்.

இந்த ஆண்டு நாலைந்து மணிவிழாக்கள் நடக்கவிருக்கின்ற னவ்ாம். அதிலே இரண்டு மூன்று மணிவிழா வருஷம்

如 வல்விக்கண்ணன் / 149

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/155&oldid=561237" இலிருந்து மீள்விக்கப்பட்டது