பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(அதாவது வழக்கமாக அறுபதாவது ஆண்டு விழா என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது) ஏதோ தனிப்பட்டவர்கள் செளகரி யத்தை முன்னிட்டு இரண்டொரு ஆண்டுகள் முன்கூட்டி யே வந்துவிட்டது போல இருக்கிறது என்று பலரும் சொல்லுகிருர்கள். இது உண்மையாகவே இருந்தாலும் இதில் என்ன தவறு என்றுதான் எனக்குப் புரியவில்லை.

Whom the Gods love die young steirin grg, பழமொழி உண்டு. அதாவது கடவுளின் நேசத்தைப் பெற்றவர்கள் சீக் கிரமே இறந்து விடுகிருர்கள் என்று சொல்லுவதுண்டு. இலக் கியாசிரியர்களையும் எழுத்தாளர்களையும் என்றுமே தமிழ்நாடு அதிகமாகக் கஷ்டப்பட விட்டதேயில்லையே! சீக்கிரம் தீர்த் துக்கட்டிவிடும் என்பது பிரசித்தம்தானே!

சுப்பிரமணிய பாரதியாருக்கு மணிவிழா கொண்டாடியிருந் தால் - அதாவது அவர் உயிருடன் இருக்கும்போதே கொண் டாடுவதாக இருந்தால் - அவருடைய முப்பத்தி ஆருவது வயதிலே கொண்டாடியிருக்க வேண்டும். கல்கி கூட மரபு பூர்வமான மணிவிழா வயதை எட்டவில்லே. புதுமைத் பித்தன், கு. ப. ரா. இவர்களும் எட்டவில்லை. மணிவிழா வருஷத்தை முன்னுக்குத் தள்ளிப் போட்டு இரண்டொரு ஆண்டுகள் முன்னதாக, சில சமயங்கள் பத்திருபது ஆண்டு கள் முன்னதாகத் தள்ளிப்போட்டுக் கொண்டாடினலும் கூட நல்லதுதான் என்றே தோன்றுகிறது. - சீனத்து அறிஞர் ஒருவர் சொன்னதை மனசில் வைத்துக் கொண்டு மணிவிழாக்கள் கொண்டாட வேண்டியது மிகவும் அவசியம்; பிறந்த குழந்தைக்கு அறிவில்லாதது அழகாக இருக்கிறது. அது கலையழகு, அறுபது வயதானவன் அறி வில்லாதிருந்தால் அது மரியாதைக்குரிய விஷயம். ஊர் கூடிப் பேசி பாராட்டப்பட வேண்டிய விஷயம் அது!

சென்னை சர்வகலாசாலையார் பதிப்பிக்கப்போகும் ஆங்கிலத் தமிழ் அகராதிக்கு டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார் தலைமைப் பதிப்பாசிரியராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது

150 / சரஸ்வதி காலம் 口

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/156&oldid=561238" இலிருந்து மீள்விக்கப்பட்டது