பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஆமாம் அந்தப் பெரியவர் ஏன் இன்னும் ஒரு தொடர் நா வல் எழுதத் தொடங்கவில்லை என்கிற கேள்வியை இலக் கிய விரோதிகள் பலரும் ஆர்வத்துடன் கேட்டு வருகிருர்கள். அவர்களேத் திருப்தி செய்வதற்காக அந்த மாஜிப் பெரியவர் "இதோ நாவல்' என்று எழுதத் தொடங்குவார் என்று நாம் நிச்சயமாக நம்பலாம்.

'நாவல் இனிமேல் தான் அவர் எழுதப் போகிருரா? என்று வடக்கேயிருந்து ஒரு குரல் கேட்கிறது. சாகித்திய அகாட மியார் தாங்கள் இந்த வருஷம் தலே சிறந்த கலைக் கற்பனை யாகிய ஒரு நாவலுக்குத் தான் பரிசு கொடுத்திருப்பதாக நம்பி யிருக்கிருர்கள் என்று ரகசியமாகவே தெரிகிறது. ரா மாயனத்தைப் பத்திரிகைக் காலத்துத் தொடர் நாவலாக, கன்னடத் தமிழில் எழுதித் தந்த பெருமை பெரியவரு

டையது. - ராமனுக்கும் பீஷ்மனுக்கும் அண்ணுவாக நின்று எழுதுவது சிரமம் தான். ஆளுல் உலகத்தை இன்று உத்தாரணம் பண்ணி விடுவது என்றும், எல்லோரையும் நல்வழிப்படுத்தி, இந்தியாவைக் கம்யூனிஸம் முதலிய தீங்குகளிலிருந்து காப் பாற்றிவிடுவது என்றும் கங்கணம் கட்டிக் கொண்டு சொற் போர் தொடுக்கும் பெரியவர்கள் பலரும் தங்களுக்குள் கண்ணன் இறந்த பிறகு அடித்துக் கொண்டு இறந்த மாதிரி இறந்தால் (சொற் போரில் சொல் இழப்பு தான் சாத்தியம்-- அது போதும்) நன்ருகவே இருக்கும். எஸ். எல். பி. டி. என்ற ஒரு ஸ்தாபனம். ஃபோர்டு ஃபவுண் டேசன் என்று ஒரு அமெரிக்க ஸ்தாபனத்தார். ஏதோ ஒரு காரணத்துக்காகத் தந்த 23 லக்ஷம் (ஆமாம் 23 லக்ஷம்) ரூபாயை ஏப்பமிட்டு விட்டு, மறுபடி ஒரு 20 லக்ஷம் வாங்கி அதையும் சாப்பிட்டு விட்டு, சாப்பிட்டது ஜெரிக்க இப் போது ஏதோ செய்து கொண்டிருப்பதாகக் கேள்வி,

சாகித்திய அகாடமி, எஸ். எல். பி. டி. என்கிற பிரசுர ஸ்தாபனங்கள் (பிரச்சார ஸ்தாபனங்கள்) எல்லாம் தங்கள்

152 / சரஸ்வதி காலம் D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/158&oldid=561240" இலிருந்து மீள்விக்கப்பட்டது