பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதியும்தான். புத்தக மதிப்புரை ஒரு பக்கம் வந்திருந்தது. நான்காவது இதழ் ஜூன் மாதம் வந்தது. 32 பக்கங்கள். அடிவான மும் புத்தக மதிப்புரையும் போக இதர பக்கங் களில் க. கைலாசபதியின் பல்லவர்கால இலக்கியம்’, எச். எம். பி. முஹிதீனின் செக் நாட்டுத் தமிழறிஞர் என்ற கட் டுரைகள் அச்சாகியிருந்தன.

இதுதான் சரஸ்வதி யின் கடைசி இதழ். அவ்வாறு அறி விக்கப்படவில்லே என்ருலும்கூட!

1962 ஏப்ரல் அல்லது மே முதல் சமரன்” வாரப் பத்திரிகை வெளிவரத் தொடங்கியிருந்தது. 1960 முதலே அரசியல் வாரப் பத்திரிகை ஒன்று நடத்த வேண்டும் என்ற எண்ணம் நண்பர் விஜயபாஸ்கரனே பலமாகப் பற்றியிருந்தது. பழை: கம்யூனிஸ்ட் பிரபலஸ்தர் இஸ்மத் பாகூர். கும்பகோணத் திலிருந்து சமரன்” என்ற பெயரில் தி. மு. க. எதிர்ப்பு ஏடு ஒன்று நடத்தி நிறுத்தியிருந்தார். பரபரப்பு உண்டாக்கிய அந்தப் பத்திரிகை மாதிரி, அதே பெயரில், அதே தோக்கு டன் அவரும் வாரப் பத்திரிகை நடத்த விரும்பி, வி. பன். இஸ்மத் பாகூடிாவிடமிருந்து அனுமதி பெற்றிருந்தார். வர வர "சரஸ்வதி பத்திரிகைக்கு ஆதரவு குறைந்து, இலக்கிய மா சிகையை தொடர்ந்து தடத்துவதில் சிரமங்கள் அதிகரித்து விடவும் அரசியல் பத்திரிகை நடத்தும் முயற்சியில் வி. பா. தீவிரமாக முனைந்தார்.

'சமரன்’ இதழ் முதலில் மூவாயிரம் அல்லது தாலாயிரம் பிர திகள் தான் அச்சிட வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனுல் முதல் இதழுக்கே ஆருயிரம் பிரதிகளுக்கு ஏஜன்சி ஆர்டர் சேர்ந்திருந்தது. பிறகு விரைவில் எட்டா யிரம் ஆகி, டத்தாயிரம் என்று தேவை அதிகரித்துக் கொன் டே போயிற்று; இம் முயற்சியில் உற்சாகமும், ஊக்கமும், மகிழ்ச்சியும் கொண்டுவிட்ட நண்பர் சரஸ்வதி'யை சத்தமில் லாமல் கை விட்டு விட்டார். எனினும் சரஸ்வதியை நிறுத் தப் போவதில்லை; எப்படியாவது திரும்பவும் கொண்டு வர

D வல்லிக் கண்ணன் 185

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/191&oldid=561274" இலிருந்து மீள்விக்கப்பட்டது