பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டும் என்று ரொம்ப காலத்துக்குச் சொல்லிக் கொண் டிருந்தார்.

ஆனல் சந்தர்பங்கள் அவருக்குத் துணை ുഷിങ്ങ്. 1962 அக்டோபரில் சீன இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. அவசர கால நடவடிக்கையாக நவம்பரில் நாடு நெடுகிலு முள்ள முக்கிய கம்யூனிஸ்டுகள் கைது செய்யப் பட்டனர். விஜயபாஸ்கரனும் ஜெயிலுக்குக் கொண்டு போகப்பட்டார். 1963 ஏப்ரலில் வெளிவந்த போது, சமரன் நிலைமை மோசி மாகியிருந்தது. அதை சீர்படுத்தி அந்த அரசியல் வார ஏட் டினை வளர்ப்பதில்தான் அவரது முழு கவனமும் சென்றது. அதுவே பெரும் போராட்டமாக அமைந்தது. அது வேறு வரலாறு ஆகும்.

O

2.ே முடிவுரை

தமிழ் நாட்டில் இலக்கியப் பத்திரிகை ஒன்றை வெற்றிகர மாகப் பல வருடங்கள் நடத்துவது அரிய பெரிய சாதனை யே தான்,

தமிழ் இலக்கியப் பத்திரிகை தோன்றுவதும், சில காலம் வெற்றி மிடுக்கோடு நடப்பதும், பின்னர் சோர்ந்து தளர்ந்து மெலிந்து மறைந்து போவதும் சகஜ நிகழ்ச்சிகளே.

இலக்கியப் பத்திரிகைகளின் வரலாறு இவ் உண்மைகளேச் சுட்டிக் காட்டுகிறது.

இலக்கியப் பத்திரிகை நடத்துவதில் பெருமை கொள்கிறவர் கள், தக்க தருணத்தில் நிறுத்திவிடத் துணிந்து இதுதான் கடைசி இதழ்’ என்று பெருமையோடு அறிவிக்க மனம் வைக்கிருர்கள் இல்லையே என்பதுதான் எனக்குள்ள குறை களில் ஒன்று.

186 / சரஸ்வதி காலம் ü

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/192&oldid=561275" இலிருந்து மீள்விக்கப்பட்டது