பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆப்படித் தன்னம்பிக்கையோடு-தன்னகங்காரத்தோடு என்று ஆண்டுமானுலும் கூறலாம்- சொல்வதில் கெளரவக் குறைவு எதுவும் இல்லை என்பதே என் எண்ணம். பக்தர்கள் மிகுந்த, பக்தி பெருகும், தமிழ்நாட்டில் பக்தி பிஸினஸ் பண்ணக் கிளம்பிய ராமலிங்க அடிகளார் ஒரு கட்டத்தில் கூற நேர்ந்தது. கடை விரித்தோம், கொள்வா ரில்லே; கட்டி விட்டோம் என்று. - - பக்தி விவகாரத்துக்கே அந்தப் பாடு என்ருல், இலக்கிய உணர்வு இல்லாத இந்த நாட்டில்- இலக்கிய ரசிகர்கள் மிக மிகக் குறைவாக உள்ள தமிழ்ச் சமுதாயத்தில்-நம்பிக் கையோடு இலக்கியப் பத்திரிகை ஆரம்பித்து, கொள்வா சில்லை என உணர்ந்ததும் கடையைக் கட்டி விடுவதில்’ தவருே, கெளரவக் குறைச்சலோ கிடையாது. வசதிகளும் பொருள் வளமும் பெற்ற அமெரிக்கா, இங்கி லாந்து போன்ற நாடுகளிலேயே இலக்கியப் பத்திரிகைகள் வெற்றிகரமாக நெடுங்காலம் நடைபெற இயலுவதில்லே. அப் படி நெருக்கடி நிலை ஏற்படுகிற போது, சம்பந்தப்பட்டவர் கள், நிலமையை விளக்கி இதுதான் கடைசி இதழ்' என்று எடுப்பாக அச்சிட்டு விடத் தயங்குவதில்லை,

காலியர்ஸ்’ என்ருெரு அமெரிக்க வாரப்பத்திரிகை. ரொம்பப் பிரமாதமாக நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு இதழும் ஒரு மலர் மாதிரி இருக்கும். பல வருடங்களுக்குப் பிறகு அதை நிறுத்தி விட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கடைசி இதழையும் சிறப்பான தரத்தோடு தயாரித்து, மேலட்டை மீதே இதுதான் கடைசி இதழ்’ என்று அச் சிட்டு அனுப்பினுர்கள். பெங்குவின் நியூரைட்டிங்-பல வருட காலம் இலக்கியப் பணி புரிந்த காலாண்டு ஏடு. அதை நிறுத்த வேண்டியது தான் என்று தோன்றியதும், நிலைமைகளே விளக்கி இதுவே கடைசி இதழ் என்று முடிவுரை கோரி நிறுத்தினர்கள்.

இப்படிப் பல உதாரணங்கள் குறிப்பிட முடியும்.

ü事 வல்லிக் கண்ணன் 1 187

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/193&oldid=561276" இலிருந்து மீள்விக்கப்பட்டது