பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்துக்களே முற்போக்கு இலக்கியம் என்பது அவ்விலக்கிய வாதிகளின் கருத்து. அவர்களது கருத்துக்கு ஒத்துவராத படைப்புகளே பிற்போக்கு இலக்கியம் என்றும், நசிவு இலக் கியம்’ என்றும் குறிப்பிடுவது அவர்கள் இயல்பு. அந்த இலக் கியக் கொள்கையிலும், கம்யூனிஸ் தத்துவத்திலும், கட்சியிட மும் தீவிரமான பற்றுதல் உடையவர்கள், தங்கள் நோக்கின் படி எழுதப்படாதவற்றை இலக்கியம் என் ஒப்புக் கொள்ளவே தயாராக இருப்பதில்லை. அவர்கள் அபிப்பிராயத்தில், முற் போக்கு இலக்கியம் மட்டுமே இலக்கியம் ஆகும்.

எனவேதான், குறுகிய நோக்கோடு முற்போக்கு, பிற்போக்கு அம்சங்களைக் கணித்து ஒதுங்கிப் போகாமல், மனித வளர்ச் சிக்குப் பாடுபடும் சகல சக்திகளையும் அரவணைத்துப் பேனு வதே சரஸ்வதி'யின் லட்சியம் என்று வி. பா. அறிவிக்க நேர்ந்தது. இந்த விசாலநோக்கு சரஸ்வதி'யின் இலக்கியத் தரமான வளர்ச்சிக்கு பலமான அஸ்திவாரமாக அமைந்தது.

வேப்பேரி, ராஜா அண்ணுமலே செட்டியார் ரோடில் இருந்த சரஸ்வதி காரியாலயம் 1956 ஜூலை மாதம், மவுண்ட் ரோடை அடுத்துள்ள லேங்ஸ் கார்டன் ரோடு (சித்ரா டாக்கீஸ் இருக் கிற ரஸ்தா) 19-ம் எண் வீட்டுக்கு இடம் மாறியது.

அவ் வருஷம் நவம்பர் இதழ் தமிழக மலர்"ஆக வெளி வந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது நடைமுறையிலிருந்த மாகாணப் பிரிவினையை மாற்றி, இந்தியாவில் மொழிவழி மாநிலம் அமைக் கப்பட்டது 1956 நவம்பரில் தான். அத்திட்டத்தின்படி தமிழ் மாநிலம் உருவாயிற்று. அப்போது அதற்கு சென்னை ராஜ்யம் என்ற பெயர் தான் இடப்பட்டிருந்தது. ஆயினும் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற இந் நிகழ்ச்சியைப் போற்றவும், தமிழ் மாநிலம் உதயமானதில் எழுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த வும், சரஸ்வதி விசேஷ மலர் தயாரித்தது.

வழக்கமாக வெளியிடப்படும் 40 பக்கங்களுக்குப் பதில், இம் மலர் 72 பக்கங்கள் கொண்டிருந்தது.

扩] வல்லிக்கண்ணன் , 69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/75&oldid=561156" இலிருந்து மீள்விக்கப்பட்டது