பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள். நம்பிக்கை வறட்சியைத் தமது கதைகளின் ஆதார சுருதியாகக் கொண்ட அவர் சிறந்த இலக்கியத்தையும் படைத்திருக்கிருர் சீர் கெட்ட இலக்கியத்தையும் படைத் திருக்கிருர். இந்த முழு உண்மையை மக்களுக்கு நாம் எப் பொழுதும் எடுத்துச்சொல்லிக் கொண்டே யிருக்க வேண்டும். அவருடைய எழுத்துக்களில் பழமையும் இருக்கிறது. புது மையும் இருக்கிறது. காலத்திற்கு ஒத்த கருத்தோட்டம் இருக்கிறது. காலத்திற்கு ஒல்வாத கருத்தோட்டம் இருக்கி joi.

அவருடைய கலே கலைக்காகவே என்னும் கருத்தோட்டம், காலத்திற்கு ஒவ்வாத கருத்தோட்டம், பழமை வாதக் கருத் தோட்டம் - பித்து பிடித்த கருத்தோட்டம், இதன் விளே வாக, விபரீத ஆசை, கயிற்றரவு ஆகிய பிற்போக்கு கதை களே அவர் எழுதியிருக்கிருர்.

கலைஞனுக்குப் பிடித்தமான பொருளேப் பற்றி, பிடித்தமான வகையில் எழுத உரிமை உண்டு. அது கலைஞனின் சுதந் திரம் ஆகும். அந்த சுதந்திரத்தை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது என்பதே கலே கலைக்காகவே என்னும் சித்தாந் தத்தின் அடிப்படைக் கருத்து. இந்தக் கருத்திலிருந்து புதுமைப்பித்தன் இறுதி வரை மாறவில்லை.

ஆளுல், புதுமைப்பித்தன் கலேகலைக்காகவே என்ற முகா மில் இருந்த போதிலும், இலக்கியத் துறையில் புதிய பரி சோதனைகளைச் செய்தார். ஐரோப்பிய இலக்கியங்களுக்கு இணையாக தமிழ் இலக்கியம் செழிக்க வேண்டும் என்னும் கருத்தினுல் தமிழ்ச் சிறுகதையின் பரப்பையும் ஆழத்தை யும் அதிகப்படுத்திஞர்; புதிய புதிய விஷயங்களேக் கை யாண்டார்; புதிய புதிய பாத்திரங்களே நமக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதனுல், 1930க்குப் பிறகு தமிழ்ச் சிறுகதை உலகில், ஒரு உயிர்ப்பும் உணர்வும் உண்டா

鹭 வல்லிக் கண்ணன் , 83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/89&oldid=561170" இலிருந்து மீள்விக்கப்பட்டது