பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் சிறுகதை உலகில், இந்த உயிர்ப்பையும் g_ಫ಼"fing! யும் புதுமைப் பித்தன் மட்டும் தோற்றுவித்து விடவில்லை. அவருடைய சகாக்களான கு. ப. ராஜகோபாலன், ந. பிச்ச மூர்த்தி, சிதம்பரசுப்ரமண்யம், பி. எஸ். ராமையா, தி. நா. குமாரஸ்வாமி முதலியோருக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு. இந்த உண்மையை கு. ப. சா. ' பி., சிதம்பர சுப்ரமண்யம் ஆகியோரின் சிறுகதைகளே விருப்பு வெறுப்பு இன்றிப் படிப்பவர்கள் மட்டுமே உணர முடியும்.”

தி.க.சி. யின் கருத்துக்களுக்கு எதிரான விவாதக் கட்டுரை எதுவும் வரவில்லை. செப்டம்பர் இதழில் ஆர்.கே. கண்ணன் எழுதிய கடிதம் பிரசுரமாயிற்று.

க:தமிழ்ச் சிறுகதை மறுமலர்ச்சி முழுவதையும் புதுமைப் வித்தனுக்கு ஏகபோகமாக்கியோ அப்படித் தொனிக்கும்படி யோ யார் சொன்னர்கள் அல்லது எழுதினர்கள்? அப்படி யாராவது சொல்லியிருந்தால் தி.க.சி. தெரிவிப்பது நல்லது. புதுமைப் பித்தன் சிறுகதை சாம்ராட் என்று சொன்னல் அப்படி அர்த்தமாகி விடமுடியாது. தமிழ் மறுமலர்ச்சியின் சாம்ராட் பாரதி என்று சொன்னவுடனே நாமக்கல் கவிஞ ரும், தேசிக வினயகம் பிள்ளேயும், பாரதி தாசனும் பிறரும் நாட்டின் நினைவிலிருந்து நழுவி விடுகிறர்களா? இல்லை.

சிறுகதை மறுமலர்ச்சிக்கு தி. க. சி. குறிப்பிட்டுள்ள ‘மணிக்கொடி இலக்கிய கர்த்தாக்கள் அனைவரும் அரும் பணியாற்றியுள்ளனர். அது இருக்கட்டும். புதுமைப் பித்த னுக்குச் சமதையாக மற்றவர்கள் சிலர் இலக்கியங்களே சிருஷ்டித்திருக்கிருர்கள். எனவே புதுமைப் பித்தனுக்கு வீரவணக்கம் செலுத்தாதீர்கள், என்கிருர் தி. க. சி. இது ரசமான விஷயம்தான். ஆனுல் விவாதிக்க இப்படிச் சொல்லி நிறுத்தி விட்டால் போதுமா? சமதையாகக் கருது வதற்கு கு. ப. ரா; பி. எஸ். ராமையா, இன்னும் மற்றவர் களப் பற்றி சுருக்கமாகவாவது தி. க. சி. தமது அபிப்

84 / சரஸ்வதி காலம் 酉

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/90&oldid=561171" இலிருந்து மீள்விக்கப்பட்டது