பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

சரிந்த சாம்ராஜ்யங்கள்


உனக்குப் போதாது' என்றான். அன்றுதான் தான் ஒரு பெரிய சாம்ராஜ்யாதிபதியாக வேண்டுமென்ற எண்ணம் உதயமாகிறது. அவனால் அடக்கியாளப்பட்ட குதிரை அவன் சென்ற பல ரணகளங்களுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அந்தக் குதிரையின் பெயரை, தான் இந்தியாவில் வெற்றிக் கண்ட ஒரு நகரத்துக்கு வைத்திருந்தான். ஆனால் அந்த குதிரையும் இந்தியாவிலேயே இறந்துவிட்டது மாத்திரமன்னியில் அந்த குதிரையின் பேரால் இடப்பட்டிருந்த நகரமும் நான்கைந்து ஆண்டுகளில் மறைந்துவிட்டது.

கி மு. 338-ல் ஷெரோனியர் போரில் அலெக்சாண்டர் தன்னுடைய பதினைந்தாவது வயதில் வீரனாக சேவை செய்திருக்கின்றான். தன் தந்தைக்குப் பிறகு தான் தான் அரசன் என்ற தளராத நம்பிக்கையால் ஜெகத்தைக் கட்டியாள வல்லதோர் வன்மைகளையும் உபாயங்களையும் சேகரித்துக்கொண்டிருக்கின்றான். குவலயமெங்கணும் கிரேக்கத்தின் கொடி பறக்க வேண்டுமென்பது தான் அலெக்சாண்டருடைய அடங்காக ஆசை. இல்லையென்றால், போர் என்று கேட்டவுடன் பயந்தோடும் பருவமாகிய பதினைந்தாம் வயதில் அவன் ஈட்டியையும் கேடயத்தையும் ஏந்தி ரணகளம் சென்றிருக்கமாட்டான். ’இம் மண்டலம் அலெக்சாண்டருடையது. அதன் தலை நகரம் மாசிடோனியா’ , இதுவே அவன் கனவிலும் நினைவிலும் சதா நினைத்துக் கொண்டிருந்த பிடிவாத எண்ணம்.

ருசிகரமான சம்பவம்

பிலிப் இரண்டாந்தாரமாக கிளியோ பாட்ரா என்பவளைத் திருமணம் செய்துகொண்டு, சாந்தித்திருமணம் நடப்பதற்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த அறைக்