உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

15



குள் இருவரும் நுழைவதற்கு முன், கிளியோபாட்ராவின் சிறிய தந்தை இவளுக்குப் பிறக்கும் குழந்தைக்கே அரசுரிமையை வழங்க உறுதியளிக்க வேண்டுமென்று பிலிப்பை வழிமறித்துக் கேட்கிறான். இதனால் அலெக்சாண்டருக்கும் பிலிப்புக்கும் வாக்கு வாதம் நடக்கிறது, இறுதியில் சண்டை முற்றி அலெக்சாண்டரை பயமுறுத்துவதற்காக வாளையுறுவுகின்றான் பிலிப். பதிலுக்கு தந்தையின் நெஞ்சுக்கு நேராக தன் வாளை நீட்டி விட்டான் அலெக்சாண்டர். பிலிப் மகனின் கோபத்தைக்கண்டு மயக்க முற்று கீழே விழுந்துவிட்டான்.

மற்றோர் நாள்

தன் சிற்றன்னையின் தம்பி அனைவருக்கும் விருந்து நடத்துகின்றான். எல்லாரும் வெறிக்கக் குடித்த பின், மதுக் கோப்பையை கையில் எடுத்துக்கொண்டு ”எல்லாரும் என் தமக்கையின் கற்பத்தில் பிறக்கும் குழந்தை தான் இந்த நாட்டின் மன்னனாக வேண்டும் என்று சந்தோஷமாக மது அருந்துங்கள்,” என்கிறான் கிளியோ பாட்ராவின் தம்பி. அந்த விருந்தில் கலந்து கொண்டிருந்த அலெக்சாண்டர் இவன்சொன்னதைக் கேட்டது தான் தாமதம், ஓங்கி விட்டான் ஒரு அறை. அந்த அறைக்குக் காரணமென்ன. மன்னனாக வேண்டியவன் நானிருக்கும் போது எப்படி கிளியோ பாட்ராவுக்குப் பிறக்கப்போகும் குழந்தை மன்னனாக வரமுடியும் என்பது தான். இதில் அலெக்சாண்டர் தன் அரசுரிமையை மாத்திரம் நிலைநாட்ட வில்லை. தன் தாய் பட்டத்துக் குறிய சட்ட ரீதியான ஒரு மகனை ஈணாதவள் என்று மறைமுகமாக அவமானப் படுத்துகிறான் அட்டலோஸ் என்பதே அலெக்சாண்டருக்கு வந்த அடங்காத கோபம்.