பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

சரிந்த சாம்ராஜ்யங்கள்



மூவாயிரம் கன்று குட்டிகளை ஒன்றாகச் சேர்த்தான். அவைகளைக் கொல்ல கொலையாளிகளை அழைத்தான். வீரம் ஒதுங்கி நின்று அந்த வீணனைக்காண சகிக்கமுடியாத வேதனையால் சிரித்தது. வாயில்லாத பசுங்கன்றுகளைக் கொன்றான். களத்தில் மாற்றாரின் தலைகளைத் துண்டித்திருக்கவேண்டியவன், தன்னே ஏளனமாகப் பேசி தன் சாம்ராஜ்ய கெளரவத்தை அழிக்கவரும் வீரர்களின் வாயில் வழிந்தோடும் குறுதியைக் கண்டிருக்கவேண்டியவன், பசுவை காமதேனுவென பாராட்டிய பார்ப்பன மன்னனேதான் பசுங்கன்றுகளைக் கொன்றான். தன் வாளின் கூர்மையை சரிபார்க்க கன்றுகளின் கழுத்தை சாணைக் கல்லாக பயன்படுத்தினான் என்று எந்த பைத்திய்க்காரன் ஒப்புக்கொள்வான். தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கன்றுகள் கதறி கதறிச் சிந்திய ரத்தக் தடாகத்தின் அடிவாரத்திலே தலையை மறைத்துக்கொண்டான் மாபாதகன் அம்பி. இந்திய வீரத்தை எதிரிக்கு ரத்ததானம் செய்வதற்குப் பதிலாக தன் கோழைக் குறுதியால் அலெக்சாண்டரின் நெற்றியிலே திலகமிட்டான். இந்திய வரலாற்று வரிகள் இக்கொடியோனின் விருந்து கண்டு இன்றும் நாளேயும் ஏன் எக்காலத்திலுமே வெட்கித் தலைகுனியும்.

கொன்று குவித்த மூவாயிரம் கன்றுகளின் இறைச்சியைக் கொண்டு அருமையான விருந்தொன்றை அலெக்சாண்டருக்கிட்டான். அசகாய சூரர்கள் வாழும் இடமோ என அகம் நடுங்கிய அலெக்சாண்டர் ஆசியாவின் முகப்பிலேயே தனக்கு ஆரியமன்னன் நடத்தும் அற்புதமான விருந்தையும் வேடிக்கையையும் கண்டான். எல்லையில் இருப்பவனே இக்கெதி என்றல் உள்ளே இருப்பவன் நிலை எப்படியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள அலெக்சாண்டர் அதிகநேரத்தையும் மூளையை