பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

சரிந்த சாம்ராஜ்யங்கள்


பீதியையும் உண்டாக்கியது. எனினும் கலிங்கத்தின் ஜனத்திரள் கண்ணிர் மல்கியது.

அசோகன் கவலை

கண்டான் அசோகன். அவனுக்கும் உள்ளம் என்று ஒன்று உண்டல்லவா-கண் கலங்கினான். கலிங்கம் தன் மனக்கண்ணைத் திறந்துவிட்டது. மக்கள் சிந்திய இரத்தம் அவன் சித்தத்தை சிதைத்து விட்டது. யாருக்காக இப்போர், யாரிடம் இந்த யுத்தம், எந்த நன்மையை உத்தேசித்து, இதனால் பெறும் பயன் எத்தனை நூற்றாண்டுகள் அழியாதிருக்கும். ஆரியாவர்த்தம் முழுவதையுமே கட்டியாண்ட சந்திரகுப்தன் எங்கே, ஐரோப்பாவை அடக்கி ஆசியாவில் வீர பவனி வந்து வெற்றிகளைக் குவித்து அதன் முன் நின்று வெற்றி சிரிப்புச் சிரித்த அலெக்சாண்டர், அவன் தாயக மண்ணே மீண்டும் மிதிக்கவே இல்லையே என்று, தான் நடத்திக்கொண்டிருக்கும் போர்க்களத்தைக் கண்டான். இவற்றை எல்லாம் விட சாக்கிய அறிஞன் உபகுப்தனைக் கண்டான்.

உபகுப்தன் வாதம்

உபகுப்தர்: சாம்ராட் அசோக சக்ரவர்த்தியாரே! கலிங்கம் உம் பெயருக்கு.......

அசோகன் : களங்கத்தை உண்டாக்கிவிட்டதென்கிறீர்களா?

உபகுப்தர்: அதோ பாரும், மக்களுக்கு உணவளிக்கும் வயல்களெல்லாம் இரத்த வெள்ளம்.

அசோகன்: அங்கே போர்வீரர்கள் செல்லவில்லையே.