சி. பி. சிற்றரசு
39
உபகுப்தர் : உங்கள் கட்டளை பிறவாமலிருந்திருக்கும். அந்த வயல்களில் சிந்தப்பட்டிருக்கும் ரத்தம் உங்களுடைய போர் வீரர்களுடையதோ, அல்லது கலிங்க வீரர்களின் ரத்தமென்றோ எண்ணாதிர்.
அசோகன் : உபகுப்தரே! பிறகு அந்த ரத்தத் தேக்கமெல்லாம் யாருடையதென்கிறீர்?
உபகுப்தர் : போரில் சம்மந்தப்படாத, சம்மந்தப் படுத்தப்படவேண்டிய அவசியத்திலே இல்லாத, போரைப்பற்றி ஒன்றுமே தெரியாத பொதுமக்களுடையது
அசோகன் : சாக்கியத் திலகமே ! உண்மைதானா?
உபகுப்தர் : சாம்ராட் அதுமாத்திரமல்ல, சிந்தப் பட்டிருக்கிறதே ரத்தம். அந்த ரத்தத்தில் ஆண் ரத்தம் பெண் ரத்தம் என்று அடையாளங் கண்டு கொள்ள முடிகிறதா.
அசோகன் : அதெப்படி முடியும்.
உபகுப்தர் : ஆ! அப்படிச் சொல்லும். அதில் ஆண்கள் ரத்தத்தைவிட பெண்கள் ரத்தந்தான் அதிக மென்பதை மறந்துவிட வேண்டாம்.
அசோகன் : யுத்த தருமமல்லதான்.
உபகுப்தர் : யுத்தமே அதருமம் என்று சொல்லும் போது அதற்கு தருமம் என்று வேறு பெயர் உண்டா. நீர் யுத்தத்தைத் தொடங்கியபிறகு வேண்டுமானால் களத்தில் அனுசரிக்க வேண்டிய முறைகள் பலவற்றிற்கு