பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

சரிந்த சாம்ராஜ்யங்கள்


யுத்த தருமம் என்று அழைக்கப்படலாம். ஆனால் நீர் கலிங்கத்தின்மேல் படையெடுக்க எண்ணினீரே அது எந்த தருமத்தைத் தழுவியதோ.

அசோகன் : மன்னர்கள் வாழ்க்கையில் மாற்றாரை அடக்கியாள்வது மண்டலத்தில் பொதுவானதுதானே.

உபகுப்தர் : மன்னர் மன்னா ! ஒருவர் அக்ரமத்தால் கையாள்கிற முறை வழி வழி சொந்தமாக்கப்பட்டால் அதற்குப் பெயர் பொதுவா. ஆசை என்று சொல்லும் ஒப்புக்கொள்ளுகிறேன்.

அசோகன் : மனம் ஒன்றிருப்பதால் ஆசையைத் துண்டுகிறது.

உபகுப்தர் : அப்படியானால் மனதால் தூண்டிவிடப் படுகிற ஆசைகள் அவ்வளவையும் நிறைவேற்ற முடியும் என்று தாங்கள் உறுதிகூற முடியுமா.

அசோகன் : (யோசிக்கிறான்)

உபகுப்தர் : சிந்தியுங்கள், நன்றாகச் சிந்தியுங்கள், கலிங்கப்போரை நிறுத்திவிட்டுக் கடுமையாகச் சிந்தியுங்கள். இந்தப் போரில் வீரர்களையிழந்து கைம்பெண் கோலத்தோடு கண்களிலே வடிந்த நீரின் வெப்பத்தைக் காலத்தாலும் மாற்றமுடியாது.

அசோகன் : அரசர்கள் தமது வீரத்தையும் புகழையும் வாளாலன்றி நிலநாட்ட முடியாதென்பதை சாக்கியப் பெருந்தகை உணரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.