பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

41


உபகுப்தர் : தாங்கள் மன்னர் மன்னர். கேட்டுக் கொள்ளவேண்டியதில்லை. கட்டளையிடலாம், சமுதாய நல்ல உணர்வின் பிரதிநிதி என்ற பேரால் சில ஐயப்பாடுகளைத் தெரிந்துகொள்ளலாமா என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

அசோகன் : பெரியோய் ! தெரியாதவைகளைத் தட்டிக்கழிக்கும் பழக்கம் எம் போன்றோர்க்கில்லே என்ற முடிவோடு தங்கள் ஐயப்பாடுகளைக் கேட்கலாம்.

உபகுப்தர் : அரசர்கள் வாளாலன்றி வீரத்தையும் புகழையும் நிலநாட்ட முடியாதென்றீரல்லவா?

அசோகன் : ஆம்.

உபகுப்தர் : உமது சிந்தையை சில ஆண்டுகளுக்கு முன்பு அழைத்துச் செல்கிறேன்.

அசோகன் : செய்யலாம்.

உபகுப்தர் : கோசலத்தையாண்டுக் கொண்டிருந்த மன்னன் சுத்தோதனன் என்பவனைப் பற்றித் தாங்கள் கேள்வி பட்டிருப்பீர்களே !

அசோகன் : ஆம்.

உபகுப்தர் : அவர், மகன் சித்தார்த்தன்.

அசோகன் : ஆம். புத்தர் பிரான்.

உபகுப்தர் : அரசர் பிரானே ! அசோகச் சக்ரவர்த்தியே ! அகிம்சைக்கு வெகு அருகாமையில் வந்து விட்டீர்கள். புத்தர், ஆயுதமெடுத்தாரா, இல்லை. இமயத்