பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

49


வித்தனர். தீமையென்றறிந்தவுடன் ஒழித்தனர். இதுவே ஆரியர்கள் அன்றும் இன்றும், இனி நாம் விழிப்பு கொள்ளாவிட்டால் என்றும் நடக்கக்கூடிய தாகும் என்பதை சரித்திராசிரியர்கள் ஒவ்வொருவரும் சுட்டிக்காட்டி யிருக்கின்றனர்.

கொலைகார புஷ்யமித்ரசுங்கன் அஸ்வமேத யாகம் செய்து ஆரியர்களின் அடிவருடியானான், அதன் காரணமாகவே மெளரியசாம்ராஜ்யம் முடிந்து, குப்தசாம் ராஜ்யம் உதயமாகிறது. அதன்பிறகு சாணக்கியன் சந்திரகுப்தன் காலத்தில் எதிர்பார்த்தபடி வெளிநாட்டு படையெடுப்பு நடந்தது, எனினும் முன்னூறு ஆண்டுகள் இந்தியசரித்திரம் இருளடர்ந்திருந்து ஆரியத்துக்கு அரசாங்கரீதியிலே இருந்த செல்வாக்கு மடிந்து மீண்டும் ஆரிய நச்சரவம் புற்றில் இருந்து கிளம்பி குப்த சிங்காதனத்தின் குடையாய் காட்சியளிக்கிறது. எனினும் அந்த பாம்பின் படத்தில் பளபளப்பு இருந்ததேயன்றி பல்லுக்குப் பின்னாலிருந்த விஷப்பையின் வேகம் காணப்படவில்லை.

இப்படி மூன்று நூற்றாண்டுகள் ஆரியம் தலையெடுக்க முடியாதிருந்ததாயினும் செயலற்று இருந்து விடவில்லை. அரசர்கள் நம்பியும், அரசுகளைத் தோற்று ஆரியம் எதிர்பார்த்தபடி நல்ல பலன்கள் எக்காலத்திலும் கிடைக்காத காரணம்

இனி வேறு வழியை பின்பற்றினாலன்றி ஆரியம் வளர்வதற்கு வழியில்லையெனக் கண்டனர். இனி புத்த மதத்தைத் தழுவுவதைப்போல் தழுவி அதை அழித்தாலன்றி தன் இனத்துக்கு உய்வில்லை என்ற முடிவுக்கு வர வேண்டியவரானர்கள்.