உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

சரிந்த சாம்ராஜ்யங்கள்


அவர்களுடைய அதிசய வேலையாகவே இருந்ததைப் பார்த்த திராவிடர் நாதியற்றவர்களாயினர்.

ஆரியத்துக்கு அழிவு

மீண்டும் ஆரியத்துக்கு அழிவு கி.பி. 5வது நூற்றாண்டில் தொடங்கிவிட்டது. அரசியல் பொருளியல் சமூக இயல் ஆகிய எல்லா பகுதியிலும் கலந்துவிட்ட ஆரியம் இனி எதிர்ப்பும் அழிவும் இருக்கவே முடியாதென்று இறுமாந்திருந்தது. அது எடுத்துக்கொண்ட வேலைகளை செவ்வனே முடித்துத்தந்த ஆரிய மன்னர்களுக்கு பாமாலைகளும் பூமாலைகளையும் தொடுத்துக் கொண்டிருந்தனர். கங்கைக் கரையைக் கடந்து விந்தியத்தைத் தாண்டி தென்னாட்டில் நுழைந்துவிட்ட ஆரியம் அகில உலகத்தையே தன்பாலடக்கி விட்டதாக எக்காள மிட்டுக்கொண்டிருந்தது. இனி இதற்கு அழிவே வர முடியாதென் றெண்ணினர். என்றாலும் அரசியலிலே அதற்கு அழிவு தோன்றிவிட்டது.

மிகிரகோளன்

கி. பி. ஐந்தாவது நூற்ருண்டின் தொடக்கத்தில் ஹூனர்கள் படையெடுத்தனர். அவர்களின் தலைவன் மிகிரகோளன் என்பவன்தான் குப்த சாம்ராஜ்யத்தை அழித்து, சிங்காதன மேறியிருந்த ஆரியத்தை அடியோடு கீழே தள்ளியவன். குப்த சாம்ராஜ்யத்தை நீர்த்துளியாக்கி விட்டான். மிகிரகோளன் ஒருவன் தோன்றி யிராவிட்டால் மன்னர் விட்டுச்சென்ற அரியாசனத்தில் இத்த மாபாதக ஆரியர்களிலே ஒருவன் அமர்ந்திருப்பான். குடி அரசு என்றே சிறுவர்களிட்ட கோலம்போல் முடிந்திருக்கும். அன்று ஆரியம் பெற்றி