உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

55


ருந்த செல்வாக்கை இவ்வளவு தைரியமாக எதிர்த்துப் போராடி அதன் அரசியல் நச்சுப் பல்லைப் பிடிங்கிய மகா வீரன் மிகிரகோளனத் தவிர வேறு யாரும் இல்லை. ஆனால் அவனுக்குச் சமானமாக சமுதாயத் துறையிலே சீர்த்திருத்தம் செய்ய எந்த வீரனும் பகிரங்கமாக முன் வராத காரணத்தால் மக்கள் உள்ளங்களிலே படிந்து விட்ட மூடப் பழக்கவழக்கங்களும் அர்த்தமில்லாத சடங்குகளும் குறைய வசதியே இல்லாமல் போய்விட் டது. இப்படி 14 நூற்றாண்டுகள் உருண்டோடி வந்த ஆரியத்தின் எதிரிகள் இருபதாம் நூற்றாண்டின் இடைக் காலத்திலே திராவிட சமுதாயத்திலே தோன்றி முழு மூச்சாக எதிர்க்கும் காரணத்தினால்தான்.

இவ்வளவு நாகரிக மிக்கக் காலம் என்று சொல்லப்படும் இந்தக் காலத்திலும், திராவிட இனத்திலே சில குறிப்பிடத் தகுந்தவர்கள் சூழ்ச்சியால் கொல்லப்படுவதும், தூக்கில் மாட்டித் தொங்கவிடப்படுவதும், பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு கடுமையான தண்டனைக் குள்ளாவதும், திராவிடத்தார் எழுதுகிற நூல்கள் தடை செய்யப்படுவதும், அல்லது கொளுத்தப்படுவதும், அவர்கள் வீடு சூறையாடப்படுவதும், நாடகங்கள் தடை செய்யப்படுவதும் போன்ற சில்லரைச் சண்டைகள் அங்குமிங்குமாக ஏற்பட்டுக்கொண்டிருப்பதற்குக் காரணமே அந்த வெண்கணாளர் திராவிடர்மேல் கொண்டிருக்கும் தீராத பகை என்பது தவிர வேறு வழியில்லை. இனி எவ்வளவு சலசலப்புகள் அவர்களால் ஏற்பட்டாலும் தெய்வீகத் தன்மையென தன் உஞ்சிவிர்த்திக்கு மகுடம் சூட்டி மாபெரியவர்கள், போற்றத் தகுந்தவர்கள் பூஜிக்கத் தகுந்தவர்கள் என்றெல்லாம் பொய் வேடம் தரித்துத் திரிந்துகொண்டிருந்த ஆரியக்