உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

63



பைத்தியக்கார துக்ளக்

தலைநகரை ராஜகிரிக்கும் ராஜகோட்டைக்கும் மக்களோடு மாற்றி பல மக்கள் வழியிலேயே இறந்துவிடக் காரணமான முன்யோசனையில்லாத பைத்தியக்கார முகம்மதுபின் துக்ளக். இவன் இந்தியாவை மாத்திரம் கனவு காணவில்லை. திபேத்தையும் சேர்த்து கணக்கிட்டான். இவனால் நீண்ட நாட்கள் ஆளமுடியாமல் லோடிகள் என்ற பலவீனமான மன்னர்களிடம் விட்டுச் சென்றான். அவர்கள் தங்கள் தலைவன் தங்களிடம் விட்டுச்சென்ற சாம்ராஜ்யத்தைக் காப்பாற்ற முடியாமல் தோல்வி கண்டார்கள்.

இப்படி விட்டும் தொட்டும், இங்கே இருந்த சில குடிலர்களாலும் குத்துயுரும் குலையுயிருமாய் இருந்த இஸ்லாமிய அரசு 1526ல் பாபர் கையில் வந்தது.

பாபர்

இந்த பாபர்தான் முதன் முதலில் பீரங்கியைக் கொண்டுவந்து களத்தில் நிறுத்தியவன். அரசைக் காப்பாற்றி விரிவாக்கிக் கொண்டிருந்தான்.

உமாயூன்

இவன் ஷேர்கான் என்ற பீகார் அரசனால் தோற்கடிக்கப்பட்டு ஓடியபோது அமர் கோட்டையில் அக்பர் பிறந்தான். 16 வயதடைந்த சிறியவனான அக்பர் 1556ல் டெல்லி அரியாசனமேறினான். இவனுக்கு பெருந்துணை புரிந்தவன் பைராம்கான். அக்பர் இந்து முஸ்லிம் சமரச வேந்தன் என்ற பட்டம் பெற்றவன். மீரா-ராணாவைத்