சி. பி. சிற்றரசு
77
ஆரியர்கள், புதியமொழியைக் கொண்டுவந்தார்கள், வேதத்தை உருவாக்கினர்கள், உபநிஷத்துகளை எழுதினார்கள், காவியங்களை இயற்றினார்கள், படை பலம் தவிர அனைத்தும் அவர்களிடம் இருந்தன. திராவிடர்களின் மகோன்னத வாழ்வைச் சிதைத்தனர். திராவிட நாகரீகத்துக்கு வழியனுப்பினர்கள், ஏன் இந்த நாட்டிற்கே, புதுப் பெயர் ஒன்றைத் தந்தார்கள், ஆனால் அவர்கள் இந்த நாட்டில் வாழத்தான் முடிந்தது. ஆதிக்கம் செலுத்தினர்கள். எந்த இனம் ஆட்சி செய்தாலும், ஷத்திரியன் செங்கோலேந்தியிருந்தாலும், சந்திர குலத்தவன், குவலயத்தின் அதிபதியாக பட்ட மேற்றாலும், சூரிய குலத்தவன், சிங்காதன மேறினாலும், ஆரியர்கள், தங்கள் இனத்துக்கும், வருங்கால சந்ததிக்கும் அழியாத வாழ்வைத்தான் தேடிக்கொண்டார்கள். அழிக்கமுடியாத சாம்ராஜ்யம் ஒன்றை ஏற்படுத்த இயலாது தோல்வியுற்றனர்.
அன்பின் வழி வந்தவன்தான், கலிங்கத்துப்போரின் கோர முடிவைக் கண்டு மனம் கலங்கியவன் தான், சீனத்துப் பேராசிரியன் சொல்வழியில் சென்றவன் தான், கேரள நாட்டானின் அன்பையும், சோழனின் பாராட்டுதலையும், பாண்டியனின் நட்பையும் பெற்றவன்தான், சிங்களம் நோக்கி தன் தங்கையை அனுப்பியவன்தான், எகிப்து நாட்டிற்கு தன் அன்பின் அறிகுறியாய் தூது கோஷ்டி அனுப்பினவன்தான். தன் வாழ்வுதான் மக்களின் வாழ்வு என்று சொன்னதுமாத்திரமன்னியில் கல்லிலே எழுதியும் வைத்தான், எனக்கென்று தனியாக வாழ்வு ஒன்று கிடையாது, அரண்மனையில் எனக்கு