சி. பி. சிற்றரசு
5
வேதபம்பரங்களை அழைத்து அவர்கள் வாயின்மூலம் மந்திரங்களை கிறு கிறுவென சுற்றவைத்து தானும் சுற்றி தன்னை எதிரியும் சுற்றி கைவிலங்கோடு கைதிகளான மன்னர்கள், ஹரே! ராமா ஆதரிக்கமாட்டாயா, என்ற பெருமூச்சோடு இருட்குகையில் இருளோடு இருளாய் விட்ட சோம்பேறிகளால் இடிந்துபோன சாம்ராஜ்யங்கள்.
அடையாளங்கள்
அரசியலில் மாற்றங் காண வேண்டுமென்று துடியாய்த் துடித்த மேதைகளின் உயிரை போதைப் பொருளென அருந்தியதால் ஏற்பட்ட ஆவேசக் குரலின் அடி தளத்திலேயே மெளனம் சாதித்துவிட்ட மன்னர்களின் உருவச்சிலைகள், இடிந்த கோட்டையின் கற்பாறைகளின் இடுக்கிலே நொறுங்கிக் கிடக்கும் எலும்புகள், காய்ந்தமரத்தின் கிளைகளிலே இரத்தஞ் சொட்டச் சொட்டத் தொங்கிக்கொண்டிருக்கும் பிரேதங்கள். மகனை இழந்த தாயின் மயானக் குரல், கணவனை இழந்த கற்பரசியின் துயரக் குரல், வெஞ்சமரில் வீழ்ந்து விட்ட தன் பிதாவை நினைத்து நினைத்து அழுதக் கண்ணீரின் உப்புக்கோடுகள் உதட்டின் ஒரத்தைத் தொடுவதற்கு முன்னால் அண்ணனும் இறந்துவிட்டான் என்ற அபாயச்செய்தியை கேட்டு செயலற்று சிலைபோல் நின்று விட்ட உருவங்கள், ஒரு பெண்ணுக்காக ஏற்பட்ட போரில் கணவன் கண்களையிழந்துவிட்டான் என்ற செய்திகேட்டு கதறிய மாதர்கள், தாவரஜங்கம சொத்துக்களையடைய ஏற்பட்ட போரில் எங்களனைவரையுமே இழந்து விட்டான் என்மகன் என்று தேம்பியழுத தாய், பூதளம் தூங்க புல்லினம் ஓய்வெடுக்க ஆந்தைகள் மட்டும் அலறிக் கொண்டிருக்க ஊர்க்கோடியிலே ஒரு