பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 119

நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மங்சனநீர், பூசை கொள்ள வாராய் பராபரமே.

- தாயுமானவர்

அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக, இன்புருகு சிந்தை இடுதிரியா, - நன்புருகி ஞானச் சுடர் விளக் கேற்றினேன் - நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான். -பூதத்தாழ்வார்

கடவுளே, ஆற்றல் அனைத்தும் முடைய ஆண்டவ னே, உன்னுடைய நட்பைப் பெற்றேன், ஒன்றுக்கும் அஞ்சேன். - இருக்வேதம்

கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும் குறித்திடுமோ ராபத்தில் வருந்துகின்ற போது, படியிலதைப் பார்த்துக வேலைவர் வருத்துந் துன்பம் பயந்தீர்த்து விடுகவெனப் பரிந்துரைத்த குருவே.

- இராமலிங்க சுவாமிகள்

வேண்டத் தக்கது அறிவோய் நீ

வேண்ட முழுதும் தருவோய் நீ வேண்டும் அயன்மாற் கரியோய் நீ

வேண்டி யென்னைப்பணி கொண்டாய் வேண்டி நீயாது அருள் செய்தாய்

யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரி சொன்று உண்டென்னில்

அதுவும் உன்றன் விருப்பன்றே. வேண்டும் வேண்டும் மெய்யடியா ருள்ளே

விரும்பி எனை அருளால், ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே, அருமா மணிமுத்தே