பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 21

புள்ளுவர் ஐவர் கள்வா

புனத்திடைப் புகுந்து நின்று துள்ளுவர் சூறைக் கொள்வர்

தூநெறி விளைய வொட்டார் முள்ளுடை யவர்கள் தம்மை

முக்கணான் பாத நீழல் உள்ளிடை மறைந்து நின்றங்கு

உணர்வினால் எய்ய லாமே. - திருநாவுக்கரசர்

அற்றது பற்றெனில் உற்றது வீடு, உயிர்

செற்றது மன்னுறில்

அற்றிறை பற்றே. - நம்மாழ்வார்

பல்லுயிர்த் தொகுதியும் பவக்கடலழுந்த அல்லல் செய்யு மவாவெனப் படுமவ் வறுமையி னின்றும் வாங்கி அறிவின் செல்வ மனித்தரு ளெனக்கே செல்வ மென்பது சிந்தையி னிறைவே; அல்கா நல்குர வவாவெனப்படுமே ஐயுணர் வடக்கிய மெய்யுணர் வல்லதை உவாக்கடல் சிறுக உலகெலாம் விழுங்கும்.

- குமரகுருபரர்

அவாவில்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுண்டேல் தவா அது மேன்மேல் வரும்.

அவாவென்ப எல்லா உயிர்க்கு மெஞ்ஞான்றும் தவா அப் பிறப்பினும் வித்து.

பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. -வள்ளுவர் உலக சுகம் நாடுவது மரணம் தரும். ஆன்ம சுகம் நாடுவது வாழ்வும் சாந்தியும் தரும். இ