பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

Yor

சர்வசமயச் சிந்தனைகள் நின்னை அறப்பெறு கிற்கிலேன் நன்னெஞ்சே பின்னையான் யாரைப் பெறுகிற்பென் - நின்னை அறப்பெறு கிற்பெனேல் பெற்றேன்ம்ற்று ஈண்டே துறக்கம் திறப்பதோர் தாழ். - அறநெறிச்சாரம் ஆசைகளுக்கு அடிமை யாகிறவன் விமோசனம் அடை யான். 3F

ஆசையை வென்றவன் அநேகம் வென்றவன். 子

ஆயிரக்கணக்கான வீரர்களை வெல்பவனைவிடத் தன் னையே வெல்பவன் சிறந்தவன். ச

அழகு உலகிலுள்ள மூன்று அழகான பொருள்கள் இவை : சகோதர ஒற்றுமை, அயலார் அன்பு, தம்பதிகள் சமாதான்ம். கி

அழுக்காறு அழுக்காறு கொள்ளாதீர்கள். நெருப்பு விறகை உண்டு விடுவதுபோல் அழுக்காறு அறச் செயல்களை அழித்து விடும். இ

அற்புதங்கள் மதத்தின் உண்மையை நிறுவ அற்புதங்கள் தேவை யில்லை. ć

அறந் தவறியவர் அறநெறியில் நிற்காதவருடன் சேராது விலகுக, அப்போது அவர் நாணம் அடைவர், ஆனால் அவரைப் பகைவராகக் கருதாமல் சகோதரராகவே கருதி நல்லறிவு கொளுத்துக. கி

அறநெறி

அறநெறி நேரானது, சீரியது, ஆனால் மக்கள் வேறு நெறிகளையே தேடுகின்றனர். தா