பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

sia siouš stěžosrstir

பிறரிடம் அன்பு செய்யாதிருத்தலைவிடப் பெரிய கேடு கிடையாது. தா மெழுகுவர்த்தி தன்னையே உண்டு பிறர்க்கு ஒளி தருகின்றது. கி.

இதயத்தில் அன்புடையோர் நீடு வாழ்வார். கி அன்பு செய்யும் இதயம் எப்பொழுதும் இளமை யுடையது. 6丁 அன்புடன் விருந்தை உபசரிப்பவன் இறைவனுக்கே விருந்து செய்பவன். 6T விருந்தோம்பல் கடவுள் வழிபாட்டின் ஒரு கூறே யாகும். . 6T

நான் சொல்வதைக் கேள், அன்பான செயல்களே அனைத்து அறம். 6T இகழ்பவனிடம் அன்பு செய், உனக்கு அறிவு கூடும், புகழ்பவனிடம் அன்பு செய்யாதே உன்னுடைய

அறிவு குறையாது. எ அடுத்தவனிடம் அன்பு செய்பவன் ஆண்டவன் ஆணையை நிறைவேற்றுபவன். e 6T

உன் சகோதரனை வெறுக்காதே, அவன் தவறு செய் தால் பழி வாங்காதே, உன்னைப்போலவே அவனை யும் நேசிப்பாய். @T

நம்பிக்கையுடன் அறத்தைத் தேடு. அத்துடன் அறிவை; அறிவினுடன் பொறுமையை; பொறுமை யுடன் சகோதர வாஞ்சையை; சகோதர வாஞ்சையுடன் அன்பை. கி

கண்ணால் காணும் சகோதரனை நேசியாதவன் கண் ணால் காணாத கடவுளை நேசிப்பது எங்ங்னம்? கடவுளை நேசிப்பவன் சகோதரனையும் நேசிக்கக் கடவன் என்பதும் கடவுள் கட்டளை. கி