பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

சர்வ சமயச் சிந்தனைகள் எங்கே பற்று உண்டோ அங்கே பந்தம் உண்டு, பற்று நீங்கினால் பந்தம் அறும், பந்தம் அறுந்தால் இன்பம் பிறக்கும், இதுதான்் வாழ்க்கை முறை. தா

சான்றோர் தம்மை மறப்பதால் காப்பாற்றப் படுகின் றனர். தன்னலம் இல்லா திருப்பதால் தம்முடைய நலத்தைப் பெறுகின்றனர். தா

அடியவரே ஆசையை அகற்றுங்கள், ஆசையை அகற்றினால் கடவுளுக்கு இணையாக உயர்வீர். கி

ஆசை உன்னை வென்று அழிக்குமுன் ஆசையை வென்றுவிடு. கி கடவுளிடம் பக்தி செய்தாலன்றி மனத்திலிருந்து ஆசையை அகற்ற முடியாது. பெள இறைவனிடம் அன்பு செய், இதயம் தூய்மை அடைந்துவிடும். பெள ஆசையுள்ள இடத்தில் அன்பு இருக்க முடியுமா?,

Lj6ss ஆசையே, நீயே எனக்கு நரகத்தில் இடம் அமைப் பவன். என்னைப் பலமுறை பிறந்து உழலச் செய்பவன். பெள

அரசபதவி, செல்வம், அதிகாரம், உலக நலன்கள்

இவை ஒன்றையும் விரும்பேன். பெள

o ஆணவம்

தன்னை வெல்வதே கடினம், தன்னை வென்றுவிட்

டால் சகலமும் வென்றுவிடலாம். منبع

உதவி பெற விரும்பினால் ஆணவத்தை அகற்று, ஆணவம் மயிரிழையாக இருந்தாலும் மலைபோல் நின்று தடுத்துவிடும். சி