பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் - 77

சான்றோர் சாதாரண உடை தரிப்பர். ஆனால் இதயத் தில் மாணிக்கம் உடையவர். தா

சான்றோர் பிறர் புகழ்வதைக் கேட்டு நெறி பிறழார், பிறர் இகழ்வதைக் கேட்டும் அயரார். தா

தமக்கு நல்லது என்று கருதாததைப் பிறர்க்குச் செய்யா திருப்பவரே அறவோர் ஆவர். ஜா

சான்றோரிடம் சினம் தோன்றுமாயின் அவர் சால்பு அழிந்துபோகும். GT

மனிதன் அடையும் முதல் சால்பு நல்ல எண்ணங்களை எண்ணுதல், இரண்டாவது சால்பு நல்ல சொற்களைச் சொல்லுதல், மூன்றாவது சால்பு நல்ல செயல்களைச் செய்தல். 6T

கடவுளை நம்பி அறநெறி நிற்பவர் அனைவரும் சான் றோராவர். எT

அருமறை தெரிந்து நீதிநெறி முறைநடந்து

தீனிவ் அகில தலமெங்கு மீறவே ஒருகவிகை கொண்டு மாறுபடுமவரை வென்று

நாலும் உறுபுகழ் சிறந்த வாழ்வுளோர் திருவொளியெனும் ஹபீபுநபி முகம்மதன்று

வானோர் சிரமிசை நடந்து சோர்வுறா இருசரன நம்பினோர்கள் வரிசைக ணிறைந்த பேர்க ளெவரினும் உயர்ந்த பேர்களே.

- உமறுப்புலவர் சான்றோர் யார்? ஆண்டவனுக்கு அஞ்சி அறநெறி யினின்று வழுவா திருப்பவரே. இ

தோணியில் ஏறிக்கொள். வாழ்வாகிய கடல் ஆழ மானது. கடக்கக் கடினமானது, சான்றோருடன் உறை

G ற்றும் தோணி, வதே கரையேற்றும் தோ பெள