பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 சலோம்

உயிரோவியமான தன்மையுடையதென்றும், அசாதாரண அமைப் பைக் கொண்டதென்றும்தான் பொருள்.

கலைஞனைப் பற்றி விமர்சகர்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தாலும், கலைஞன் உள்ளம் உறுதியாகவே தன் கலை உள்ளத்தோடு ஒன்றியே நிற்கும்.

வாழ்க்கையை விரிவாக்குவதே கலை; வாழ்க்கையைக் காப்பியடிப்பது கலையல்ல; வாழ்க்கையைவிட கலையின் விஸ்தீரணம் அதிகம்; கற்பனை உலகம் அகண்ட சக்தி வாய்ந்தது; அபூர்வமான உலகம் அகண்ட சக்தி வாய்ந்தது; அபூர்வமான வில்லங்கமான சந்தர்ப்பங்களில், கலையே வாழ்க்கைக்கு வழி காட்டியாக, ஒளிப்பந்தமாக முன்வந்து நிற்கிறது. இதை யாரும் ஆட்சேபிக்கவே முடியாதல்லவா?

"சலோம்', குமரியின் நகை ஜாப்தா மிக மிக விசித்திரமாக இருக்கிறது; ஒயில்டின் வருணனை, பிரமாதமாக நிகரற்ற முறை யிலே அமைந்திருக்கிறது; மன்னன் தன் மகளிடம் சொல்லு கிறான், இங்கே பல ஆபரணங்களை ஒளித்து வைத்திருக்கிறேன். உன் அன்னை கூட அதைப் பார்த்ததில்லை. அவை வெகு அபூர்வ மானவை, நான்கு வட முத்தாரம் ஒன்று என்னிடம் இருக்கிறது. அவை வெள்ளிக் கதிர்களிலே பதிந்திருக்கும் சந்திரர்களைப் போல இருக்கும். அவை பொன் வலையில் வீழ்ந்த ஐம்பது வெண்மதியங்கள் போன்றவை. அதை ஒரு இராணி அணிந்தி ருந்தாள்; நீ அதை மார்பிலே அணிந்துகொண்டால், இராணி போல விளங்குவாய். என்னிடம் இரண்டு விதமான சிவந்த நீலக்கற்கள் இருக்கின்றன. ஒன்று ஒயினைப் போல இருண்டிருக் கிறது; நீர் கலந்து நிறப்பொலிவு பெற்ற மதுவைப்போலச் சிவந்தி ருக்கிறது மற்றொன்று. புலிக் கண்கள்போல் இள மஞ்சள் நிறத்தில் சில கற்களும், காட்டுப் புறாவின் கண்களைப் போன்று வெண் சிவப்பில் சில கற்களும், பூனையின் கண்களைப் போல இளம் பச்சை நிறத்தில் சில கற்களும் இருக்கின்றன. இறந்த பெண்ணின் கண்கள் போன்ற கோமேதக் கற்களும் என்னிடம்