பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 சலோம்

இந்தப் பாபியை நரகத்திற்கோ சுவர்க்கத்திற்கோ அனுப்ப முடியாமல் கடவுளே மதி மயங்கி நிற்கிறார்.'

எப்படி எல்லாம் ஆஸ்கார் ஒயில்ட்டு, நீதியைக் கதையில் வைத்து நுட்பமாகப் பின்னிக் காட்டுகிறார். பாஷை, கவிஞன் கையில், ஒரு மணமுள்ள மலர் நிறைந்த ஜடையாக மின்னலிடுகி றது. ஆம்!

ஆஸ்கார் ஒயில்ட்டுக்கு, வாழ்க்கை அனைத்தும்ே விடு முறை விழாவாகத் தோன்றியது. இன்பத்தையும், செல்வத்தையும் வெறியோடு நீண்ட நாள் அனுபவித்தப்பின் தான், துன்ப உலகில் புகுந்து திண்டாடித் திண்டாடி, வேதாந்த வலையிலே தன்னு டைய ஆழ்ந்த சிந்தனைகளைப் பின்னிப்பின்னி அலங்கரிக் கிறான். 'உலகமே துன்ப மேடையில்தான் கட்டப்பட்டிருக் கின்றது' என்று அழுதழுது புலம்பித் தீர்க்கிறான்.

பெண்மை எழில் நிறைந்த பார்வையான முகங்களோடு கூடிய சிறு பையன்களை அளவுக்கு மிஞ்சி ஒயில்ட்டு விரும்ப ஆரம்பித்தான். அழகான பையன்களைக் கண்டு காதலிக்கவே ஆரம்பித்து விட்டான். இது ஒரு பெரும்பிழை; ஜனங்கள் ஒயில்ட்டை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஒயில்டின் புகழ் ஒட்டம் பிடித்தது; எவ்வளவோ செல்வத் தையும், செல்வாக்கையும் ஆரம்பத்தில் பெற்றிருந்த ஒயில்ட்டு இறுதியில் எல்லாம் இழந்து, நோய்வாய்ப்பட்டுத் தனக்கு ஒரு முக்கியமான ஆபரேஷன் செய்து கொள்ளப் பணமின்றி உயிர் நீத்தான். குடித்தே குட்டிச்சுவராய்ப் போனான்.

"வாழ்க்கை எனக்கு ஒரு புதிர். ஆனால், நானும் வாழ்க்கைக்கு ஒரு புதிர்தான்' என்று ஒயில்ட்டு உறுதியாக அனு பவித்துக் கூறினான்.

இது ஒரு பாரடாக்ஸ் (Paradox) : பார்ப்பதற்கு முரணாகத் தோன்றும் விடுகதை நடையிலே, ஆஸ்கார் ஒயில்டும், பெர்னாட்