பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு - 18

காப்படோசியன் :

முத்துக்கள் பதித்த கருங்கவிப்பு அணிந்திருக்கிறாளே அவள் தான் மன்னியா? நீலத் துள்கள் படிந்த அந்தக் கூந்தலழகி தான் மன்னியா?

முதல் வீரன் :

ஆம், அவள் தான் மன்னி எரோதியா. இரண்டாவது வீரன்:

மன்னனுக்கு மதுவின்மேல் மிக்க ஆவல், மூன்று வகை யான மது அவனிடம் இருக்கிறது. சாமத்ராசிலிருந்து வரும் மது, சீசரின் மேலங்கியைப் போல செந்நீல நிறமாக இருக்கிறது.

காப்படோசியன் :

நான் சீசரைப் பார்த்ததே இல்லை. இரண்டாவது வீரன் :

சைப்ரசு நகரிலிருந்து வரும் மது தங்கத்தைப்போல மஞ்சளாக இருக்கிறது.

காப்படோசியன் :

தங்கம் என்றால் எனக்கு வெகு ஆசை. இரண்டாவது வீரன் :

மற்றொரு மது சிசிலியிலிருந்து வருகிறது. அது குருதியைப் போலச் சிவப்பாக இருக்கிறது.

நூபியன் :

எங்கள் நாட்டுத் தெய்வங்களுக்கு அரத்தத்தின் மேல் மிக்க ஆவல். ஆண்டிற்கு இருமுறை இளைஞர்களையும் இளஞ்சி களையும் அவைகளுக்காகப் பலியிடுகிறோம். ஐம்பது இளைஞர் கள், நூறு இளஞ்சிகள். ஆனால், அவற்றுக்கு வேண்டிய அளவு