பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 42

மிக்க பேரழகன். மிகமிக எழிலன். கவர்ச்சி மிகுந்த கண்கள். அவன் இளவரசியை ஆவலாகப் பலமுறை நோக்குவான். அவன் இளவரசியைச் சற்று அதிகமாகவே பார்ப்பது வழக்கம்.

எரோதியாக :

அவன் மட்டுமா? இளவரசியை அதிகமாகப் பார்ப் பவர்கள் இன்னும் எத்தனையோ பேர்.

மன்னன் :

அவனுடைய தந்தை ஓர் அரசன். நான் அவனை நாட்டி லிருந்து துரத்தினேன். அரசியாக இருந்த அவனுடைய அன்னையை நீ அடிமையாக்கிக் கொண்டாய். ஆகவே இங்கு எனது விருந்தினனாக இருந்தான் அவன். நான் காவலர் தலைவ னாக அமர்த்தினேன். இப்போது மறைந்தான், 'உயிர் துறந்தான், நான் வருந்துகிறேன்...... ஆ, பிணத்தை ஏன் இங்கே போட்டிருக் கிறீர்கள்... என்னால் கண் கொண்டு பார்க்க முடிவில்லை. கொண்டுபோங்கள் அப்பால் கொண்டுபோங்கள். (பிணத்தை எடுத்துக் கொண்டு போகிறார்கள்) இங்கே குளிர் அதிகமாக இருக் கிறது. காற்று பலமாக வீசுகிறது அல்லவா? மன்னி :

காற்றைக் கானோமே!

மன்னன் :

அல்ல, காற்று வீசுகிறது......... வானில் சிறகு அடிக்கும் ஓசையும் கேட்கிறது. ஆம், வலுவான ஓசை கேட்கிறது. கேட்க வில்லையா, உனக்கு? மன்னி :

ஒன்றையும் காணோமே!

மன்னன் :

இப்போது அந்த ஒசையைக் காணோம். ஆனால், சற்று நேரத்திற்கு முன்பு கேட்டேன். அது காற்று இரைச்சலாயிருக்கும்