பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 சலோம்

என்பதில் ஐயம் இல்லை. அது மறைந்தது... இல்லை, இல்லை... மீண்டும் அதோ.. அதோ (காதுகொடுத்துக் கேட்கிறான்) உனக்குக் கேட்கவில்லையா? சிறகு அடித்துக்கொள்ளுவது போன்ற ஒசை.

மன்னி :

ஒன்றையும் காணோம். உங்களுக்கு உடம்பு ஒழுங்கில்லை

போலும், உள்ளே போவோம்.

மன்னன் :

இல்ல்ை, எனக்கு உடல்நலக் கேடு இல்லை; உன்னுடைய

மகளுக்குத்தான் நோய். அவளுடைய முகத்தைப் பார். மிகவும்

வெளிறி இருக்கிறது.

மன்னி :

அவளைப் பார்க்கக் கூடாது என்று உங்களிடம் சொல்ல

வில்லையா?

மன்னன் :

கிண்ணத்திலே மது ஊற்று (மதுவைக் கொண்டுவருகிறாள்

மன்னி) சலோம், இங்கே வா, என்னுடன் கொஞ்சம் மது அருந்து.

இது வெகு இனிமையான மது. சீசரே எனக்காக அனுப்பி இருக்

கிறார். உனது சிவந்த மெல்லிய உதடுகளை இந்த மதுவிலே

தோய்த்துக்கொள். -

சலோம் :

எனக்கு வேட்கை இல்லை, அரசே!

மன்னன் :

அவள் என்னவாக விடை சொல்லுகிறாள், பார்த்தாயா? உன்னுடைய மகள் சொல்லுவதைக் கேட்டாயா?

மன்னி :

அவள் சொல்லுவது சரி. நீங்கள் ஏன் எப்பொழுதும் அவளையே பார்க்கிறீர்கள்?