பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஸ்கார் ஒயில்ட்டு ஓர் அறிமுகம்

്ക്കൂ ஆஸ்கார் ஒயில்ட்டு சிறந்த எழுத்தாளர். 1856-இல் பிறந்து 1900-இல் மறைந்தார். 44 வருஷங்களில், அவர் எழுத்திலே இலக்கிய மின்சாரத்தைச் சிருஷ்டி செய்தவர்.

இவர் ஐரிஷ்காரர்; கவிஞர், நாவலாசிரியர், நாடகாசிரியர், கட்டுரையாளர், ஆராய்ச்சி மன்னர், சிந்தனை ஒவியர்.

இவருடைய ஆங்கில வசனம், எதிர்பாராத வனப்புடன், தந்தச் சிற்பமாகவே உதயமாகிறது. மொழியை ஒரு கலைக் கோயிலாகவே கட்டியிருக்கிறார். ஆழ்ந்த கருத்துகளை நடையின் சுடரிலே விளக்கும் அபூர்வ ஆற்றலுடையவர்; இவரைப்போல் எழுத முடியாது. இவருடைய நூல்களை மூலகதியுடன் மொழி பெயர்ப்பதும் கஷ்டம்.

இவர் டப்ளின் நகரத்து டிரினிடி கலாசாலையிலும், ஆக்ஸ்போர்ட் மாக்டலின் கலாசாலையிலும் கல்வி பயின்றவர்.

1895-இல் இவர் சிறைவாசம் செய்ய நேர்ந்தது. சிறையிலே இவர் பல நூல்களை இயற்றியுள்ளார்.

லண்டன், பாரிஸ், ஆக்ஸ்போர்ட் வாழ்க்கையில் ஊறிக் கிடந்தவர், ஒயில்ட்.

அமெரிக்காவிலும் அரிய சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக் கிறார்.

ஆஸ்கார் ஒயில்ட்டு ஆங்கிலத்தில் எழுதிய நூல்"De Profunds" அருமையான சிறப்பு வாய்ந்தது; ஒயில்டின் சிறை அனுப வம்தான், இதில் தத்துவ விளக்கமாகவும் வாழ்க்கையின் விமர்சன மாகவும், இலக்கிய ரசனையாகவும் அமைந்திருக்கிறது. "துன்பம் உடல், இன்பம் ஆன்மா' என்பதை மிக ஆழமாகப் பரிசீலனை