பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 60

கொடுக்கிறேன்,. ஆள்நிலத்தில் செம்பாதி வேண்டுமானாலும் அளிக்கிறேன். எனக்காகச் சற்றுநேரம் நடனமாடு, சலோம், சலோம். அருள் செய்.

சலோம் :

அரசே, வாக்குக் கொடுத்துவிட்டீர்கள்.

மன்னன் :

ஆம், சலோம்.

சலோம் :

நான் கேட்பது எல்லாம். ஆள்நிலத்தில் பாதிகூட - கொடுப் பீர்கள்?

மன்னன் :

ஆம். ஆள்நிலத்தில் பாதிகூட, சலோம் மாநிலத்தில் பாதி பெற்றால் வனப்பு மிகுந்த அரசியாவாய். ஆ! இங்கே, மிகவும் குளிராக இருக்கிறது. காற்று வேறு... வானிலே... வானிலே சிறகு ஒலி கேட்கிறது. இதற்குக் காரணம் என்ன? ஆ. ஒரு பறவை, பெரிய கரும் பறவை, மாடத்தின்மேல் இறகை விரித்துக் கவிந் திருப்பது போலத் தோன்றுகிறது. இந்தப் பறவை.... என் கண்ணுக்கு ஏன் தோன்றவில்லை! அதனுடைய சிறகு ஒலி அஞ்சத் தக்கதாக இருக்கிறது. குளிர்காற்று வீசுகிறது. குளிர் இல்லை, வெப்பமாக இருக்கிறது. மூச்சுத் திணறுகிறது. கையிலே கொஞ்சம் தண்ணிர் ஊற்றுங்கள். எனது மேலங்கியை அவிழ்ந்து விடுங்கள். விரைந்து விரைந்து........ வேண்டா அப்படியே இருக் கட்டும். மலர் மாலை குத்துகிறது. மலர்கள் நெருப்பைப்போலச் சுடுகின்றன. (மாலையைப் பிடிங்கி ஏறிகிறான்)......இப்பொழுது முச்சுவிட முடிகிறது. அதன் இதழ்கள் எவ்வளவு சிவந்திருக்கின் றன. அவை ஆடையிலே படிந்திருக்கும் அரத்தக் கறைகளைப் போல இருக்கின்றன. அதனால் நமக்கு என்ன? நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும் அறிகுறிகளைத் காண்பது சரியில்லை.