பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகா ஒயில்ட்டு 66

அச்சமாக இருக்குமே. அத்தகைய பொருள்களைக் கன்னிப் பெண் பார்க்கக் கூடாது. அதிலே உனக்கு என்ன மகிழ்ச்சி உவகை இருக் கப்போகிறது? வேண்டா, அது வேண்டா. நான் சொல்லுவதைக் கேள், என்னிடம் ஒரு மரகதம் இருக்கிறது. வட்டமான பெரிய மர கதம், சீசர் அனுப்பிய மரகதம். அந்த மரகத்தைக் கண் முன்னாலே வைத்துப் பார்த்தாயானால், நெடுந்தொலைவில் நடப்பது எல்லாம் உனக்குத் தெரியும். உலகத்தினுள்ள எல்லா மரகதங் களைக் காட்டிலும் அது பெரிது. அது உனக்குப் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். அதைக் கேள், கொடுக்கிறேன்.

சலோம் :

சோகனானுடைய தலையே வேண்டும்.

மன்னன் :

நான் சொல்லுவதைக் கேட்கவில்லையே! சலோம், கேள்,

சலோம் :

அறிவனின் தலை!

மன்னன் :

வேண்டா. வேண்டா, அது உனக்கு வேண்டா. இன்றைய மாலை முழுவதும் உன்னையே பார்த்துக் கொண்டு இருந்ததற் காக என் மனத்தை வருத்த விரும்புகிறாய். இன்றைய மாலை முழுவதும் உன்னை ஓயாமல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது உண்மைதான். என்ன செய்வது? உன் பேரழுகு என்னைக் கலக் கிற்று. உன் வனப்பைக்கண்டு என் மனம் துன்பத்தில் ஆழ்ந்தது. அதனாலேயே, உன்னை உற்றுநோக்கிக் கொண்டு இருந்தேன். இனிமேல் உன்னைப் பார்க்கவில்லை. மக்களையோ, பொருள்க ளையோ, நாம் கண்ணால் பார்க்கலாகாது, கண்ணாடியில் மட்டும் பார்க்கலாம், ஏனெனில், அது நிழல்களைத்தானே எதிரொலிக் கிறது.....மது. மதுவைக் கொண்டு வாருங்கள்.... நீர்வேட்கையை அடக்கிக் கொள்ளுகிறேன்.... சலோம், சலோம், இனி நாம் இரு